FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: joker on September 02, 2025, 12:02:20 PM
-
என் தேவதைக்கு இன்று பிறந்த நாள்
தேவதைகள்
குழந்தையாக இருக்க வேண்டியதில்லை
தேவதைகள்
சகோதரியாக இருக்க வேண்டியதில்லை
தேவதைகள்
காதலியாக இருக்க வேண்டியதில்லை
தேவைதைகள்
வாழ்வில் நல்ல நண்பியாக கூட இருக்கலாம்
அதற்கு உதாரணம் நீ
தேவதைகள்
என்றும் நம் அருகில் இருப்பதில்லை
இருந்தும் நம்மை மறப்பதுமில்லை
தேவதைகள்
என்றும் நம்முடன் பேசிக்கொண்டிருப்பதில்லை
தேவதைகள்
என்றும் நம் மகிழ்ச்சியையே விரும்புகிறது
தேவதைகள்
நமக்கு மகிழ்ச்சியையே தருகிறது
இறைவன் அருள் என்றும் உன் துணை நிற்கும்
என்றும் என் பிரார்த்தனைகளில் நீ
என் தேவதை
HAPPY BIRTHDAY NATCHATHIRA