FTC Forum

Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: MysteRy on August 30, 2025, 08:30:45 AM

Title: சளி பிரச்சனைக்கு நிவாரணம் தரும் பூண்டு....
Post by: MysteRy on August 30, 2025, 08:30:45 AM
(https://i.ibb.co/Q7mdyLvn/541028150-1242982097863015-8994774242655616769-n.jpg) (https://ibb.co/p6XyYcjZ)

பூண்டு சளி தொல்லையில் இருந்து மட்டுமின்றி, காய்ச்சல், இருமல், உயர் இரத்த சர்க்கரை, கொலஸ்ட்ரால், வயிற்று வலி, பாம்பு கடி போன்றவற்றை குணமாக்கவும் உதவுகிறது.
சளி பிடித்திருக்கும் போது, பூண்டை பச்சையாக உட்கொண்டு வந்தால், சளி தொல்லையில் இருந்து விடுதலைப் பெறலாம். அதற்கு தினமும் பலமுறை பூண்டு பற்களை ஒவ்வொன்றாக சாப்பிட வேண்டும்.

பூண்டை தேனுடன் சேர்த்து கலந்து சாப்பிட்டால் சளி தொல்லையில் இருந்து நிவாரணம் கிடைக்கும். அதிலும் 2 பூண்டு பற்களை பொடியாக வெட்டி, அதனை தேனுடன் சேர்த்து தினமும் இரண்டு முறை உட்கொண்டு வர வேண்டும்

2 பூண்டு பற்களை பொடியாக வெட்டி, அதனை ஒரு டம்ளர் நீரில் போட்டு நன்கு கொதிக்க வைத்து, பின் அந்த நீரைக் குடித்து வர, சளி தொல்லை அகலும்.

ஆரஞ்சு ஜூஸில் பூண்டை சேர்த்து எடுத்து வர, சளி பிரச்சனையில் இருந்து விடுதலை கிடைக்கும். அதற்கு 2 பூண்டு பற்களை பொடியாக வெட்டி, அதனை ஒரு டம்ளர் ஆரஞ்சு ஜூஸில் போட்டு, இரவில் படுக்கும் முன் குடித்து வர, உடலின் வெப்பநிலை அதிகரித்து, சளியில் இருந்து உடனடி நிவாரணம் கிடைக்கும்.

சளி பிடித்திருக்கும் போது பூண்டு டீ செய்து குடித்து வர, விரைவில் சளி குணமாகும். பூண்டு டீ செய்யும் போது, அத்துடன் எலுமிச்சை சாறு, தேன், இஞ்சி சேர்த்தும் குடிக்கலாம். இதனால் டீயின் சுவை அதிகரிப்பதோடு, உடலின் நோயெதிர்ப்பு மண்டலம் வலிமையடைந்து, சளியில் இருந்து விடுதலை கிடைக்கும்.

மழைக்காலத்தில் பூண்டு சூப்பைக் குடித்து வந்தால், சளி, இருமல் போன்றவை தாக்காமல் பார்த்துக் கொள்ளலாம். அதிலும் உங்களுக்கு சளி பிடிப்பது போன்று இருந்தால், ஒரு நாளைக்கு 2 முறை பூண்டு சூப் குடித்து வந்தால், சளியை அப்படியே விரட்டிவிடலாம். மேலும் பூண்டு சூப் உடலுக்கு ஆற்றலை வழங்கும்...