FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: !! AnbaY !! on July 28, 2011, 04:57:53 PM
-
பெண்ணாகப் பிறத்தல்பெரும் பாவம் என்றனர்
உண்மை அறியஇறைவனிடம் வேண்டினேன்
ஒரு நாளேனும் என்னை ஒருபெண்ணாக மாற்று என்று
மாறினேன் உணர்ந்தேன் என்னை
அன்பின் அடைக்கலமாக அன்னையாய்
பாசத்தின் பாசறையாக தமக்கையாய்
கனிவான காதலில் மனைவியாய்
சோதனைகளை எதிர் கொண்டுசாதனைகளாய் மாற்றும்
பாரதி கனவு கண்ட புதுமைப் பெண்ணாய்
பெண்ணாகப் பிறத்தல்பெரும் தவம் என்று!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
-
nice kavithai ;)