(https://i.ibb.co/pj2psVng/537374083-122248638032037466-1629785158253032106-n.jpg) (https://imgbb.com/)
லெமன் கிராஸ் இலைகளை நசுக்கி முகர்ந்தால் எலுமிச்சை சாறு வாசனை கிடைக்கும். உடல் எடை, ஆஸ்துமா, அத்திகேரியா, டிரைஸ்கின் குறட்டை போன்ற பிரச்சினைகளுக்குத் தீர்வாக இந்த லெமன் கிராஸ் பயன்படுகிறது
உடல் எடை சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் , தைராய்டு கோளாறுகள், சிறுநீரகப் பிரச்சினைகள், மன அழுத்த நோய், அன்சைடி நியுரோசிஸ் பிரச்சினைகள், மூட் என்ஹன்சர் என்ற மனதை மகிழ்ச்சியாக வைத்திருக்க சுற்றுப் புறத்தில் இருக்கும் பாக்டீரியா வைரஸ் கொசு போன்றவற்றை இயற்கையான முறையில் குறைக்க என பல வகைகளில் பயன்படுகிறது இந்த லெமன் கிராஸ். மேற்பூச்சாகப் பயன்படுத்தி உடலில் இருக்கும் கொழுப்பைக் கரைக்கும் தன்மை உள்ளது .
லெமன் கிராஸ் இலைகளை அரைத்து விழுதாக்கி வயிறு பகுதி பிட்டப் பகுதி தொடைப்பகுதி கழுத்துப் பகுதி என எங்கெல்லாம் உடல் எடை குறைய வேண்டும் என நினைக்கிறோமோ அங்கெல்லாம் பூசி ஒரு மணி நேரம் கழித்துக் குளித்து வர உடலில் தேவை இல்லாமல் தங்கி இருக்கும் கொழுப்புகள் கரைந்து உடல் எடை மற்றும் அமைப்பு மிகப் பெரிய மாறுதல் தெரியும் . தொடர்ந்து ஆறு மாதங்கள் உடல் எடை குறைப்புக்கு உள் மருந்தாக அல்ல வெள்ளி மருந்தாகவே பயன்படுத்தி வர மிகப் பெரிய உடல் எடையில் மாறுதல்கள் ஏற்படும்.
ஆஸ்துமா, நுரையீரல் பாதிப்பு காரணமாக் சுவாசக் குழாய்கள் சுருங்கி விரிவதில் ஏற்படும் பிரச்சினைகள் சுவாசக் குழாய்கள் முழுமையாக சுருங்கி விரிவடைய முடியாத நிலையில் பிராங்கோ டைலேடர்ஸ் பயன்படுத்தும் நிலைக்குத் தள்ளப் படும்போது அதனால் ஏற்படும் பின் விளைவுகளாக நரம்பு மண்டலம் பாதிப்பு குறிப்பாக பார்க்கின்சன் டிசார்டர் என்ற பிரச்சினையால் பாதிப்புகள் உண்டாகின்றன . இந்த ஆஸ்துமா பிரச்சினையை இயற்கையாக குணப்படுத்த மிக சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது லெமன் கிராஸ் எண்ணெய்.
லெமன் கிராஸ் எண்ணெய் இரண்டு சொட்டுகள் பால் அல்லது வெந்நீரில் கலந்து குடிக்க மார்புப் பகுதி தசைகள் சுருங்கி விரிவதற்குக்ம் நுரையீரல் சுருங்கி விர்தல் தன்மையும் மிகப் பெரிய மாறுதல் அடைந்து நுரையீரல் மண்டலம் சம்பந்தப் பட்ட ஆஸ்துமா பிரச்சினைகளை குறைக்கக் கூடிய மிக சிறந்த மருந்தாக இருக்கிறது. அத்திக்கேரியா உடல் முழுவதும் முட்கள் குத்துவது போன்ற குத்தக் கூடிய அரிப்பு சொரிந்தால் கடுமையாக வீங்கிப் போவது முகம் உதடு தோள்பட்டை தசைகள் தொடைப்பகுதி கை முதுகுப் பகுதி போன்ற இடங்களில் வீக்கம் கடுமையான அரிப்பு குறிப்பாக மாலை நேரத்தில் அரிப்பு காலை வரை இருக்கும் காலையில் எழுந்தால் அரிப்பு இருக்காது.
இந்தப் அத்திக் கேரியா பிரச்சினைக்கு லெமன் கிராஸ் எண்ணெய் மிக சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது.
நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் ஐம்பது மில்லி
லெமன் கிராஸ் எண்ணெய் .... பத்து மில்லி கலந்து லேசாக சுட வைத்து உடல் முழுவதும் பூசி அரைமணி நேரம் கழித்துக் குளித்து வர அரிப்பு நீங்கும் ஒரு மண்டலம் செய்யும்போது படிப்படியாகக் குறைந்து நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
ட்ரை எக்சிமா
கால்களில் மட்டும் வட்ட வட்டமாக இருக்கும். மாலை நேரங்களில் கடுமையாக அரிப்பு இருக்கும். ஷூ போட்டிருந்தால் அரிப்பு அதிகமாகி சொரிந்து சொரிந்து தண்ணீராக வடியும். அரிக்கவில்லை என்றால் அவ்வப்போது உடலில் புல்லரிப்பது போன்ற நிலை ஏற்படும்.
தேங்காய் எண்ணெய் ஐம்பது மில்லி
லெமன் கிராஸ் எண்ணெய் ... பத்து மில்லி கலந்து அரிப்பு ஏற்படும் இடங்களில் பூசி அரைமணி நேரம் கழித்து கழுவி அல்லது குளித்து வர அரிப்புகள் மிகப் பெரிய அளவில் குறைந்து வருவதை உணர முடியும்.