FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Lakshya on August 23, 2025, 10:53:07 AM

Title: சிரிப்பின் சோக நிழல் ✨🖤
Post by: Lakshya on August 23, 2025, 10:53:07 AM
சிரிப்பின் சோக நிழல் 🖤

ஒரு ஆண் சிரிக்கிறான் - வாழ்க்கையின் சுமையை சிரிப்பால் மறைக்கிறான்...
சுமையை யாரும் காணப்போவதில்லை...

ஒரு பெண் சிரிக்கிறாள் - கண்ணீர் வழிந்தாலும்
"எல்லாம் நன்மைக்கே" என்று நகர்ந்து செல்கிறாள்...
வலியை யாரும் உணரப்போவதில்லை...

வெற்றியை காட்டும் முகமூடி , உள்ளத்தில் தோல்வியின் காயம்...
இதயத்தில் உதிரும் கண்ணீரின் சுவடு...

சோக நிழல் என்றுமே நிலைத்திருக்காது...
சிரிப்பின் சத்தம் தான் அதை மறக்க செய்யும்...

❤️வாழ்க்கை எவ்வளவு சோதனைகளை கொடுத்தாலும், சிரிப்போடு எதிர் கொள்ளும் மனமே வெற்றி காணும்❤️