(https://i.ibb.co/0ynDN3y3/538369316-122248549874037466-1434176623777715226-n.jpg) (https://imgbb.com/)
ஒரு பயங்கர சூழலில், விமானப் பயணிகள் உயிர் பிழைக்கும் வாய்ப்பு, நடக்கும் விபத்தினைப் பொறுத்தே உள்ளது. வரலாற்று ரீதியாகவே பின்புற வரிசையில் உள்ள நடு இருக்கைகள் பாதுகாப்பானவை என முன்பு நடைபெற்ற விபத்துகள், மரணங்கள், உயிர்பிழைத்தவர்கள் அடிப்படையில் 1985ம் ஆண்டு வெளியான அறிக்கையொன்று குறிப்பிடுகிறது.
1985லிருந்து அமெரிக்காவில் நடந்துள்ள வர்த்தக விமான விபத்துகளின் எண்ணிக்கை 368 ஆகும். இவ்விபத்துகளில் உள்ள உயிர் பிழைக்கும் வாய்ப்பு 96% ஆகும். வாழ்நாள் முழுவதும் விமானத்தில் பயணிக்கும் 8,015 பயணிகளில் ஒருவர் விமான விபத்துகளில் இறக்க வாய்ப்பு உள்ளது.
5வது வரிசை இருக்கை விதிவிமானம் தீ விபத்திற்குள்ளாகும் போது, நான்கு வரிசை இருக்கைகளைத் தாண்டி ஐந்தாவது வரிசையில் அமர்ந்திருக்கும் பயணிகள் வெளியேறும் வழியைக் கண்டுபிடித்து, உயிர் பிழைக்க வாய்ப்பு மிகவும் குறைவு. இந்த முறையில் உயிரிழந்துள்ள பயணிகளின் இறப்பு சதவிகிதம் 38 ஆகும்.நடு இருக்கைகள்நடு இருக்கைகளில் பயணித்து உயிரிழந்த பயணிகளின் இறப்பு சதவிகிதம் 39 ஆகும்.பின்புற இருக்கைகள்பின்புற இருக்கைகளில் பயணித்து உயிரிழந்த பயணிகளின் இறப்பு சதவிகிதம் 32 ஆகும்.
பாதுகாப்பான இருக்கை இதுதான்பின்புற வரிசையில் உள்ள நடு இருக்கையில் பயணித்த பயணிகளின் இறப்பு சதவிகிதம் 28 ஆக உள்ளது. இது மற்ற இருக்கைகளைவிட மிகக் குறைந்த இறப்பு சதவீதமாகும். கடைசி வரிசை இருக்கையில் உள்ள பெரும் பலம், தீ விபத்து ஏற்பட்டால் வெளியேறும் வழி அருகிலிருப்பதால் வேகமாக தப்பிக்க முடியும் என்பதுதான்.
அவசர கால வழிவிமானத்தில் தீப்பிடிக்கும்போது மூன்று நிமிடங்களுக்குள்ளாகவே அது மோசமான விபத்தாக மாறிவிட வாய்ப்புள்ளது. எஃப்ஏஏ விதிமுறைகள், ‘விமானம் 60 அடி உயரத்தில் (18 மீ) பறக்கும்போது விபத்து ஏற்பட்டால் 90 நிமிடங்களுக்குள் பயணிகள் வெளியேற்றப்பட வேண்டும்’ என்று அறிவுறுத்துகின்றன.
நடுவரிசை இருக்கைகளின் ஆபத்து கேபினின் அருகில் உள்ள மத்திய நடுவரிசை இருக்கைகள் அனைத்தும், மற்ற இருக்கைகளை விடவும் 57 சதவிகிதம் விபத்தில் சிக்கும் ஆபத்தில் இருப்பதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. விமானம் கிளம்பும்போதோ (அ) கீழிறங்கும்போதோ தான் பெரும்பாலான விபத்துகள் ஏற்படுகின்றன.
வழிமுறைகள் உண்டு...
படிப்பவர் இல்லை.
இருக்கைகளில் வைக்கப்பட்டிருக்கும் அவசர கால பாதுகாப்பு வழிமுறைகள் அடங்கிய அட்டையை 89 சதவிகித பயணிகள் வாசிப்பதேயில்லை. விமானம் கிளம்பும் முன் பயணிகளுக்கு கூறப்படும் வழிமுறைகளை பாதிப் பேர் மட்டுமே கவனிக்கின்றனர்.