FTC Forum

Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: MysteRy on August 22, 2025, 08:49:28 AM

Title: சாப்பிட்டதும் ஏன் குளிக்கக்கூடாது தெரியுமா?
Post by: MysteRy on August 22, 2025, 08:49:28 AM
(https://i.ibb.co/qFx7qLbY/534821469-1236040465223845-2509312346931261901-n.jpg) (https://imgbb.com/)

பயணுள்ள தகவல்...

நீங்கள் உங்கள் தாத்தா பாட்டியுடன் இருந்தால், சாப்பிட்ட உடனேயே உங்களை குளிக்க விடமாட்டார்கள். சாப்பிட்டதும் குளிக்கக்கூடாது என்று பலமுறை சொல்வதைக் கேட்டிருப்பீர்கள். அவர்களிடம் ஏன் என்று காரணம் கேட்டால், நல்லதல்ல என்று மட்டும் சொல்வார்கள்.

அதற்கு பின் எந்த ஒரு ஆன்மீக காரணமும் இல்லை. ஆனால் அறிவியல் காரணம் மட்டும் உள்ளது. அதை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

குளிக்கும் போது நடக்கும் செயல்
"""""""""""""""""""""""""""""""""""""""""
குளிக்கும் போது நம் உடலின் ஒவ்வொரு செல்லும் புத்துணர்ச்சியடையும். கடந்த 24 மணிநேரத்தில் நம் சருமத்தில் சேர்ந்த அழுக்குகள் வெளியேற்றப்படும். இப்படி வெளியேற்றும் போது, உடலினுள் உள்ள செல்கள் மிகவும் ஆற்றலுடனும், புத்துணர்வுடனும் இருக்கும். இதனால் தான் குளித்து முடித்ததும் பசி ஏற்படுகிறது.

ஏன் சாப்பிட்டு குளிப்பது வீண்?
"""""""""""""""""""""""""""""""""""""""
உணவை ஜீரணிக்க நொதிகள் தேவை. சாப்பிட்டவுடன் குளித்தால் உடலில் உண்டான குளிர்ச்சித்தன்மையால் நொதிகள் சுரக்காது. இதனால் அஜீரணத்திற்கு வழி வகுக்கும். எனவே உண்டபின் குளிக்கக் கூடாது

குளித்த பின் உண்பதால் நேரும் நன்மைகள்.....

ஒரு குளித்து முடித்த பின் உணவு உட்கொள்ளும் போது, உடலானது உணவில் உள்ள சத்துக்களை முற்றிலும் உறிஞ்சி, உடலுக்கு தேவையான ஆற்றலை பெற்று கொள்ளும்.

சாப்பிட்ட பின் குளிப்பதால் சந்திக்கும் விளைவு...
""""""""""""""""""""""""""""""""""""
உணவு உட்கொண்ட உடனேயே குளித்தால், செரிமான மண்டலத்தின் செயல்பாடு குறைந்து, மலச்சிக்கல் மற்றும் இதர வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளால் அவஸ்தைப்படக்கூடும்..

ஆகவே சிந்தியூங்கள் செயள்படுங்கள்