FTC Forum

Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: MysteRy on August 21, 2025, 08:06:15 AM

Title: ஆரோக்கியத்தைத் தரும் முருங்கை!
Post by: MysteRy on August 21, 2025, 08:06:15 AM
(https://i.ibb.co/qGrfcNv/535467825-122248229696037466-1205170191120387156-n.jpg) (https://imgbb.com/)

முருங்கைக் காய் உடலுக்கு சிறந்த, ஆரோக்கியத்தைத் தரக்கூடியது. இதில் இரும்புச் சத்து அதிகமாக உள்ளது. இதன் கீரை மிகவும் சுவை யாக இருக்கும். அப்படிப்பட்ட முருங்கையை பிடிக்காத மனிதர்களே இந்த உலகத்தில் இல்லை எனலாம். இது பல மருத்துவ குணங்களைத் தன்னுள் கொண்டுள்ளது. இதை ஒரு மூலிகை மரம் என்றும் சொல்ல லாம். இந்த முருங்கை மரத்தின் ஒவ்வொரு பாகமும் ஒவ்வொரு நன் மைகளை கொண்டுள்ளது. இது உடலின் பல விதமான நோய்களைக் கட்டுப்படுத்தி குணப்படுத்துகிறது.

முருங்கையின் நன்மைகள் :

1. முருங்கை இலையை பொரியல் செய்து சாப்பிட்டால் மலச்சிக்கல், கண்நோய், பித்த மயக்கம் போன்றவை வராது. மேலும் இந்த பொரியலை 40 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டால் ஆண்மை பெருகும். அப்படி பொரியல் செய்யும் போது அதில் புளி, எலுமிச்சை பழச்சாறு போன்றவற்றை சேர்க்கக் கூடாது.

2. பெண்கள் முருங்கை இலையை சாறு பிழிந்து இரு வேளை குடித்து வந்தால், அடிவயிற்றில் ஏற்படும் வலியும், விலக்கு தள்ளிப் போவதா ல் ஏற்படும் வலியும் குணமாகும்.

3. குழந்தைகளுக்கு முருங்கை இலைச் சாற்றை பிழிந்து 10 மில்லி தினமும் இரு வேளை கொடுத்தால், உடலானது ஊட்டம் பெறும்.

4. முருங்கை பிஞ்சை சமைத்து சாப்பிட்டால் எலும்புருக்கி, சளி ஆகிய வற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நல்லது.

5. முருங்கை இலையை மட்டும் போட்டு மிளகு ரசம் வைத்து சாப்பிட்டால், உடல் தளர்ச்சி அடைந்தாலோ, உடல் வலி இருந்தாலோ குணமடையும்.

6. குடற்புண், டைபாய்டு, இருமல் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்கள், முருங்கைப்பட்டைத் தூள், சுக்கு, மிளகு, சீரகம் ஆகியவற்றை பொடி செய்து, வெந்நீரைக் காய்ச்சி, அந்த பொடியைப் போட்டு கலக்கி, மூன்று வேளையும் சாப்பிட்டால், அவை சரியாகும்.

ஆகவே முருங்கையை சாப்பிடுங்க.. ஆரோக்கியமா இருங்க.