FTC Forum

தமிழ்ப் பூங்கா => திரைப்பட பாடல் வரிகள் (தமிழ்) => Topic started by: RajKumar on August 20, 2025, 04:06:59 PM

Title: இரவின் மடியில்
Post by: RajKumar on August 20, 2025, 04:06:59 PM
🌺🌸 *இரவின் மடியில்* 🌸🌺
🎼🎧🎤🎸🎻🎼🎻🎸🎤🎧🎼
 
*எந்தன் நெஞ்சில் நீங்காத தென்றல் நீதானா…*
 
┈┉┅━❀••🌿🍁TSN🍁🌿••❀━┅┉┈
🎬 : *கலைஞன்*
 
🎻 : *இளையராஜா*
 
🖌: *வாலி*         
 
🎤 : *கே.ஜே. யேசுதாஸ் & எஸ். ஜானகி*
 
📅 : *1993*
┈┉┅━❀••🌿🌺🌿••❀━┅┉┈
 

—BGM—

ஆண் : எந்தன் நெஞ்சில் நீங்காத தென்றல் நீதானா…
எண்ணம் எங்கும் நீ பாடும் திருதிரு தில்லானா…

ஆண் : எந்தன் நெஞ்சில் நீங்காத தென்றல் நீதானா…
எண்ணம் எங்கும் நீ பாடும் திருதிரு தில்லானா…

ஆண் : இசையின் ஸ்வரங்கள் தேனா…
இசைக்கும் குயில் நீதானா வா…

பெண் : எந்தன் நெஞ்சில் நீங்காத தென்றல் நீதானா…
எண்ணம் எங்கும் நீ பாடும் திருதிரு தில்லானா…

—BGM—

ஆண் : பனியில் நனையும் மார்கழிப் பூவே…
எனை நீ பிரிந்தால் ஏதொரு வாழ்வே…

பெண் : உனக்கென பிறந்தவள் நானா…
நிலவுக்கு துணை இந்த வானா…

ஆண் : வாழ்ந்தேனே உறவின்றி முன்னால்…
வந்தாயே உறவாகா இந்நாள்…

பெண் : எந்தன் நெஞ்சில்… ஹோ ம்ம் ம்ம்…
எந்தன் நெஞ்சில் நீங்காத தென்றல் நீதானா…
எண்ணம் எங்கும் நீ பாடும் திருதிரு தில்லானா…

பெண் : இசையின் ஸ்வரங்கள் தேனா…
இசைக்கும் குயில் நீதானா வா…

ஆண் : எந்தன் நெஞ்சில் நீங்காத தென்றல் நீதானா…
எண்ணம் எங்கும் நீ பாடும் திருதிரு தில்லானா…

ஆண் : ஆஆ ஆஆ ஆஆ…
ஸகரி ம கரிஸநி ஸநிப ம பநி ஸகரி…

—BGM—

பெண் : சுகங்கள் மெதுவாய் நீ தர வேண்டும்…
நகங்கள் பதித்தால் காயங்கள் தோன்றும்…

ஆண் : உதடுகள் உரசிடத்தானே…
வலிகளும் குறைந்திடும் மானே…

பெண் : நான் சூடும் நூலாடை போலே…
நீ ஆடு பூமேனி மேலே…

ஆண் : எந்தன் நெஞ்சில்… ஹோ ம்ம் ம்ம்…
எந்தன் நெஞ்சில் நீங்காத தென்றல் நீதானா…
எண்ணம் எங்கும் நீ பாடும் திருதிரு தில்லானா…

பெண் : இசையின் ஸ்வரங்கள் தேனா…
ஆண் : இசைக்கும் குயில் நீதானா வா…

பெண் : எந்தன் நெஞ்சில் நீங்காத தென்றல் நீதானா…
ஆண் : எண்ணம் எங்கும் நீ பாடும் திருதிரு தில்லானா…


 
┈┉┅━❀••🌿🌺🌿••❀━┅┉┈
Title: Re: இரவின் மடியில்
Post by: RajKumar on August 21, 2025, 12:23:32 PM
*இன்றைய இரவின் மடியில்🎼🎼🌹*🔴🟢

*படம்: மீரா*

*பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம்*

*மற்றும் ஆஷா போன்சுலே*

*இசை அமைப்பாளர் : இளையராஜா*


*பாடல் வரிகள்*
ஆண் : ஓ… பட்டர்பிளை பட்டர்பிளை
ஏன் விரித்தாய் சிறகை
வா வா
ஓ… பட்டர்பிளை பட்டர்பிளை
ஏன் விரித்தாய் சிறகை

ஆண் : அருகில் நீ வருவாயோ
உனக்காகத் திறந்தேன் மனதின் கதவை

பெண் : ஆஹா…. ஓ…
பட்டர்பிளை பட்டர்பிளை
ஏன் விரித்தாய் சிறகை
வா வா
ஓ… பட்டர்பிளை பட்டர்பிளை
ஏன் விரித்தாய் சிறகை

பெண் : எனையும் தான் உன்னைப் போலே
படைத்தானே இறைவன் எனும் ஓர் தலைவன்

ஆண் : நெருங்கும் போது அகப்படாமல்
பறந்து போகிறாய்
நிழலைப் போல தொடரும் என்னை
மறந்து போகிறாய்

பெண் : ஆஹா உனக்கு யாரும் தடையும்
இங்கு விதிப்பதில்லையே
ஆஹா எனக்கும் கூட
அடிமைக் கோலம் பிடிப்பதில்லையே

ஆண் : உனை நான் சந்தித்தேன்
உனையே சிந்தித்தேன்
எனை நீ இணை சேரும்
திருநாள் வருமோ
பட்டர்பிளை பட்டர்பிளை

பெண் : ஆஹா…. ஓ…
பட்டர்பிளை பட்டர்பிளை

பெண் : மலர்கள் தோறும் நடந்து போகும்
சிறிய ஜீவனே
உந்தன் மனதைக் கொஞ்சம் இரவல் கேட்கும்
எனது ஜீவனே

ஆண் : ஆஹா விழிகள் நூறு கடிதம் போட்டும்
பதில்கள் இல்லையே
விரக தாபம் அனலை மூட்டும்
பருவம் தொல்லையே

பெண் : உன்னை நான் கொஞ்சத்தான்
மடிமேல் துஞ்சத்தான்
தினம் நான் எதிர்பார்க்கும்
திருநாள் வருமோ
பட்டர்பிளை பட்டர்பிளை

ஆண் : ஓ… பட்டர்பிளை பட்டர்பிளை
ஏன் விரித்தாய் சிறகை
பெண் : வா வா
ஓ… பட்டர்பிளை பட்டர்பிளை
ஏன் விரித்தாய் சிறகை

ஆண் : அருகில் நீ வருவாயோ
உனக்காகத் திறந்தேன் மனதின் கதவை

ஆண் : ஆஹா ஓ… பட்டர்பிளை பட்டர்பிளை

பட்டர்பிளை 🟢🔴
Title: Re: இரவின் மடியில்
Post by: RajKumar on August 22, 2025, 12:45:44 PM
*இரவின்மடியில்*

🌹🌷🌹🌷🌷🌹🌷🌹

படம்: *பூந்தோட்ட காவல்காரன்*

📒📂📚🖍️🖍️📚📂📒

பாடல்: *கங்கை அமரன்*

🎙️🔦🎙️🔦🔦🎙️🔦🎙️

பாடகி : *பி. சுஷீலா*
பாடகர் : *கே.ஜே. யேசுதாஸ்*

🥁🎻🎸🎺🎺🎸🎻🥁

இசை : *இளையராஜா*

🎧🎹🎬🎼🎼🎬🎹🎧

ஆண் : சிந்திய வெண்மணி
சிப்பியில் முத்தாச்சு என்
கண்ணம்மா செந்நிற மேனியில்
என் மனம் பித்தாச்சு என்
பொண்ணம்மா சேலாடும்
கண்ணில் பாலூறும் நேரம்
செவ்வானம் எங்கும் பொன்
தூவும் கோலம்

ஆண் : சிந்திய வெண்மணி
சிப்பியில் முத்தாச்சு என்
கண்ணம்மா செந்நிற மேனியில்
என் மனம் பித்தாச்சு

ஆண் : பெண்ணென்னும்
வீட்டில் நீ செய்த யாகம்
கண் மூடி பார்த்தேன்
எங்கும் இன்பம்

பெண் : அன்பென்னும்
ஆற்றில் நீராடும் நேரம்
அங்கங்கள் யாவும்
இன்னும் எண்ணும்

ஆண் : இன்றைக்கும்
என்றைக்கும் நீ எந்தன்
பக்கத்தில்

பெண் : இன்பத்தை
வர்ணிக்கும் என்னுள்ளம்
சொர்க்கத்தில்

ஆண் : மெல்லிய
நூலிடை வாடியதே
மன்மத காவியம்
மூடியதே

ஆண் & பெண் : அள்ளியும்
கிள்ளியும் ஆயிரம் ஆசைகள்
அன்பென்னும் கீர்த்தனை
பாடியதே

ஆண் : சிந்திய வெண்மணி
சிப்பியில் முத்தாச்சு என்
கண்ணம்மா செந்நிற மேனியில்
என் மனம் பித்தாச்சு என்
பொண்ணம்மா சேலாடும்
கண்ணில் பாலூறும் நேரம்
செவ்வானம் எங்கும் பொன்
தூவும் கோலம்

ஆண் : சிந்திய வெண்மணி
சிப்பியில் முத்தாச்சு என்
கண்ணம்மா செந்நிற மேனியில்
என் மனம் பித்தாச்சு

ஆண் : தாய் தந்த பாசம்
தந்தை உன் வீரம்
சேய் கொள்ள வேண்டும்
அன்பே அன்பே

பெண் : காலங்கள்
போற்றும் கைதந்து
காக்கும் என் பிள்ளை
தன்னை இங்கே இங்கே

ஆண் : வீட்டுக்கும்
நாட்டுக்கும் நான்
பாடும் பாட்டுக்கும்

பெண் : எத்திக்கும்
தித்திக்கும் என் இன்ப
கூட்டுக்கும்

ஆண் : என் மகன்
காவிய நாயகனே
என் உயிர் தேசத்து
காவலனே

ஆண் & பெண் : வாடிய
பூமியில் கார்முகிலாய்
மழை தூவிடும் மானுடன்
என் மகனே

ஆண் : சிந்திய வெண்மணி
சிப்பியில் முத்தாச்சு என்
கண்ணம்மா செந்நிற மேனியில்
என் மனம் பித்தாச்சு என்
பொண்ணம்மா சேலாடும்
கண்ணில் பாலூறும் நேரம்
செவ்வானம் எங்கும் பொன்
தூவும் கோலம்

ஆண் : சிந்திய வெண்மணி
சிப்பியில் முத்தாச்சு என்
கண்ணம்மா செந்நிற மேனியில்
என் மனம் பித்தாச்சு

 🌹🌷🌹🌷🌷🌹🌷🌹
Title: Re: இரவின் மடியில்
Post by: RajKumar on August 23, 2025, 02:44:52 PM
*இரவின்மடியில்*

🌹🌷🌹🌷🌷🌹🌷🌹

படம்: *கீதாஞ்சலி*

📒📂📚🖍️🖍️📚📂📒

பாடல்: *வைரமுத்து*

🎙️🔦🎙️🔦🔦🎙️🔦🎙️

பாடகர் : *இளையராஜா*

🥁🎺🎻🎸🎸🎻🎺🥁

இசை : *இளையராஜா*

🎧🎹🎬🎼🎼🎬🎹🎧

ஆண் : துள்ளி எழுந்தது
பாட்டு சின்ன குயிலிசை
கேட்டு சந்த வரிகள போட்டு
சொல்லிக் கொடுத்தது காற்று

ஆண் : உறவோடுதான்
அதப் பாடணும் இரவோடு
தான் அரங்கேறணும்

ஆண் : துள்ளி எழுந்தது
பாட்டு சின்ன குயிலிசை
கேட்டு

ஆண் : உயிரே ஒரு
வானம்பாடி உனக்காக
கூவுது அழகே புது ஆசை
வெள்ளம் அணை தாண்டி
தாவுது

ஆண் : மலரே தினம்
மாலை நேரம் மனம்
தானே நோகுது

ஆண் : மாலை முதல்
மாலை முதல் காலை
வரை சொன்னால் என்ன
காதல் கதை காமன் கணை
எனை வதைக்குதே

ஆண் : துள்ளி எழுந்தது
பாட்டு சின்ன குயிலிசை
கேட்டு

ஆண் : அடியே ஒரு
தூக்கம் போட்டு
நெடுநாள் தான் ஆனது
கிளியே பசும்பாலும்
தேனும் வெறுப்பாகி
போனது

ஆண் : நிலவே பகல்
நேரம் போலே
நெருப்பாக காயுது

ஆண் : நான் தேடிடும்
ஹ்ம்ம் நான் தேடிடும்
ஹ்ம்ம் நான் தேடிடும்
ராசாத்தியே நீ போவதா
ஏமாத்தியே வா வா
கண்ணே இதோ
அழைக்குது

ஆண் : துள்ளி எழுந்தது
பாட்டு சின்ன குயிலிசை
கேட்டு சந்த வரிகள போட்டு
சொல்லிக் கொடுத்தது காற்று

ஆண் : உறவோடுதான்
அதப் பாடணும் இரவோடு
தான் அரங்கேறணும்

ஆண் : துள்ளி எழுந்தது
பாட்டு சின்ன குயிலிசை
கேட்டு

🌹🌷🌹🌷🌷🌹🌷🌹
Title: Re: இரவின் மடியில்
Post by: RajKumar on August 25, 2025, 03:35:03 PM
💫💕💕💕💕💕💫

இரவின் மடியில்

💫💕💕💕💕💕💫

*இளைய நிலா பொழிகிறதே*
*இதயம் வரை நனைகிறதே*

*உலாப் போகும் மேகம் கனாக் காணுமே*
*விழாக் காணுமே வானமே*

இளைய நிலா பொழிகிறதே
இதயம் வரை நனைகிறதே

உலாப் போகும் மேகம் கனாக் காணுமே
விழாக் காணுமே வானமே

இளைய நிலா பொழிகிறதே
இதயம் வரை நனைகிறதே ...

*வரும் வழியில் பனி மழையில்*
*பருவ நிலா தினம் நனையும்*

*முகிலெடுத்து முகம் துடைத்து*
*விடியும் வரை நடை பழகும்*

வரும் வழியில் பனி மழையில்
பருவ நிலா தினம் நனையும்

முகிலெடுத்து முகம் துடைத்து
விடியும் வரை நடை பழகும்

*வான வீதியில் மேக ஊர்வலம்*
*காணும் போதிலே ஆறுதல் தரும்*

*பருவ மகள் விழிகளிலே கனவு வரும்*

இளைய நிலா பொழிகிறதே
உலாப் போகும் மேகம் கனாக் காணுமே
விழாக் காணுமே வானமே

இளைய நிலா பொழிகிறதே ...

*முகிலினங்கள் அலைகிறதே*
*முகவரிகள் தொலைந்தனவோ*

*முகவரிகள் தவறியதால்*
*அழுதிடுமோ அது மழையோ*

முகிலினங்கள் அலைகிறதே
முகவரிகள் தொலைந்தனவோ

முகவரிகள் தவறியதால்
அழுதிடுமோ அது மழையோ

*நீல வானிலே வெள்ளி ஓடைகள்*
*ஓடுகின்றதே என்ன ஜாடைகள்*

*விண்வெளியில் விதைத்தது*
*யார் நவமணிகள்*

இளைய நிலா பொழிகிறதே
இதயம் வரை நனைகிறதே

உலாப் போகும் மேகம் கனாக் காணுமே
விழாக் காணுமே வானமே

இளைய நிலா பொழிகிறதே ...

💫💕💕💕💕💕💫

படம் : *பயணங்கள் முடிவதில்லை*
பாடகர் : *எஸ்.பி.பாலசுப்ரமணியம்*
பாடலாசிரியர் : *வைரமுத்து*
இசை : *இளையராஜா*

💫💕💕💕💕💕💫
Title: Re: இரவின் மடியில்
Post by: RajKumar on September 22, 2025, 03:51:57 PM
🎵🎸🎹🎷🥁🎻🎶🎶🎻🥁🎷🎹🎸🎵
*இரவின் மடியில்*🎵🎸🎹🎷🥁🎻🎶🎙️🎶🎻

பாடகர்கள் : இளையராஜா மற்றும் அனன்யா பட்

இசை அமைப்பாளர் : இளையராஜா

பாடல் ஆசிரியர் : இளையராஜா

ஆண் : வழி நெடுக காட்டுமல்லி
யாரும் அத பாக்கலியே
எனக்கா பூத்தது காட்டுக்குள்ள
வருமா? வருமா? வீட்டுக்குள்ள

ஆண் : காடே மணக்குது வாசத்துல
என்னோட கலக்குது நேசத்துல
வழி நெடுக காட்டுமல்லி…..

பெண் : வழி நெடுக காட்டுமல்லி
கண்பார்க்கும் கவனமில்லை
பூக்குற நேரம் தெரியாது
காத்திருப்பேன் நான் சலிக்காது

பெண் : பூ மணம் புதுசா தெரியும்மா
என் மனம் கரும்பா இனிக்குதம்மா
வழி நெடுக காட்டுமல்லி…..

ஆண் : கனவெனக்கு வந்ததில்லை
இது நிசமா கனவு இல்ல
பெண் : கனவா போனது வாழ்க்க இல்ல
வாழ்க்கைய நெனச்சி வாழ்ந்தில்ல

ஆண் : மஞ்சு மூட்டமா மனசுக்குள்ள
போகுற வருகிற நினைவுகளே
பெண் : ஒறங்குது உள்ளே ஒரு விசயம்
ஒறக்கம் கலஞ்சா நெசம் தெரியும்

ஆண் : காத்திருப்பேன் நான் திரும்பி வர
காட்டுமல்லியில அரும்பெடுக்க

பெண் : வழி நெடுக காட்டுமல்லி
கண்பார்க்கும் கவனமில்லை

ஆண் : காடே மண்க்குது வாசத்துல
என்னோட கலக்குது நேசத்துல

பெண் : கிட்ட வரும் நேரத்துல
எட்டி போற தூரத்துல

ஆண் : நீ இருக்க உள்ளுக்குள்ள
உன்ன விட்டு போவதில்ல

பெண் : ஒலகத்தில் எங்கோ மூலையில
இருக்கிற இருண்ட காட்டுக்குள்ள

ஆண் : இறு சிறு உயிரு துடிக்கிறது
நெசமா யாருக்கும் தெரியாது

பெண் : சாட்சி சொல்லும் இந்தக் காடறியும்
காட்டுல வீசிடும் காத்தறியும்
வழி நெடுக காட்டுமல்லி
கண் பார்த்தும் கவனமில்லை

ஆண் : எனக்கா பூத்தது காட்டுக்குள்ள
வருமா? வருமா? வீட்டுக்குள்ள

பெண் : பூ மணம் புதுசா தெரியுதம்மா
என் மனம் கரும்பா இனிக்குதம்மா
இருவர் : வழி நெடுக காட்டுமல்லி…..



Title: Re: இரவின் மடியில்
Post by: RajKumar on October 03, 2025, 02:51:32 PM
Song - *Sundari Kannal Oru*
Movie - *Thalapathi*
Lyrics - *Vaali*
Singers - *S. Janaki, S. P. Balasubramaniam*
Music - *Ilaiyaraaja*
Year - *1991*

பாடல் - *சுந்தரி கண்ணால் ஒரு சேதி*
படம் - *தளபதி*
பாடலாசிரியர் - *வாலி*
பாடியவர்கள் - *SP பாலசுப்ரமணியம் & S.ஜானகி*
இசை - *இளையராஜா*

சுந்தரி கண்ணால் ஒரு சேதி
சொல்லடி இன்னாள் நல்ல தேதி
என்னையே தந்தேன் உனக்காக
ஜென்மமே கொண்டேன் அதற்காக
நான் உனை நீங்கமாட்டேன்
நீங்கினால் தூங்கமாட்டேன்
சேர்ந்ததே நம் ஜீவனே

வாய் மொழிந்த வார்த்தை யாவும்
காற்றில் போனால் நியாயமா
பாய் விரித்துப் பாவை பார்த்த
காதல் இன்பம் மாயமா
அ அ அ வாள்பிடித்து நின்றால் கூட
நெஞ்சில் உந்தன் ஊர்வலம்
போர்க்களத்தில் சாய்ந்தால் கூட
ஜீவன் உன்னைச் சேர்ந்திடும்
தேனிலவு நான் வாட
ஏன் இந்த சோதனை
வானிலவை நீ கேளு
கூறும் என் வேதனை
எனை தன் அன்பே மறந்தாயோ
மறப்பேன் என்றே நினைத்தாயோ

சோலையிலும் முட்கள் தோன்றும்
நானும் நீயும் நீங்கினால்
பாலையிலும் பூக்கள் பூக்கும்
நான் உன் மார்பில் தூங்கினால்
அ அ அ மாதங்களும் வாரம் ஆகும்
நானும் நீயும் கூடினால்
வாரங்களும் மாதம் ஆகும்
பாதை மாறி ஓடினால்
கோடி சுகம் வாராதோ
நீ எனைத் தீண்டினால்
காயங்களும் ஆறாதோ
நீ எதிர் தோன்றினால்
உடனே வந்தால் உயிர் வாழும்
வருவேன் அன்னாள் வரக்கூடும்
Title: Re: இரவின் மடியில்
Post by: RajKumar on October 24, 2025, 04:18:34 PM
🌺🌸 *இரவின் மடியில்* 🌸🌺
🎼🎧🎤🎸🎻🎼🎻🎸🎤🎧🎼
 
*நீதானே எந்தன் பொன்வசந்தம்…*
 
┈┉┅━❀••🌿🍁TSN🍁🌿••❀━┅┉┈
🎬 : *நினைவெல்லாம் நித்யா*
 
🎻 : *இளையராஜா*         
 
🖌: *வைரமுத்து*
 
🎤 : *எஸ். பி. பாலசுப்ரமணியம்*
 
📅 : *1982*
┈┉┅━❀••🌿🌺🌿••❀━┅┉┈
 

ஆண் : நீதானே எந்தன் பொன்வசந்தம்…
புது ராஜ வாழ்க்கை நாளை உன் சொந்தம்…

—BGM—

ஆண் : நீதானே எந்தன் பொன்வசந்தம்…
புது ராஜ வாழ்க்கை நாளை உன் சொந்தம்…

ஆண் : ஆஹா… நீதானே எந்தன் பொன்வசந்தம்…
புது ராஜ வாழ்க்கை நாளை உன் சொந்தம்…
என் வாசல் ஹே வரவேற்கும் அந்நேரம்…
உன் சொர்க்கம் ஹே அரங்கேறும் கண்ணோரம்…

ஆண் : நீதானே எந்தன் பொன்வசந்தம்…
புது ராஜ வாழ்க்கை நாளை உன் சொந்தம்…

—BGM—

ஆண் : பாதை முழுதும் கோடி மலர்கள்…
பாடி வருமே தேவக் குயில்கள்…
உன் ஆடை ஹே மிதக்கின்ற பாலாடை…
உன் காலை ஹே குளிப்பாட்டும் நீரோடை…

ஆண் : வெயில் நாளும் சுடுமென தேகம் கெடுமென…
ஜன்னல் திரையிடும் மேகம்…
சிறு காதல் விழிகளில் வீசும் மொழிகளில்…
பிறையும் பௌர்ணமி ஆகும்…
சந்தோஷம் உன்னோடு கைவீசும் எந்நாளும்…

ஆண் : நீதானே எந்தன் பொன்வசந்தம்…
புது ராஜ வாழ்க்கை நாளை உன் சொந்தம்…
என் வாசல் ஹே வரவேற்கும் அந்நேரம்…
உன் சொர்க்கம் ஹே அரங்கேறும் கண்ணோரம்…

—BGM—

ஆண் : ஈர இரவில் நூறு கனவு…
பேதை விழியில் போதை நினைவு…
பன்னீரில் ஹே இளந்தேகம் நீராடும்…
பனிப்பூக்கள் ஹே உனைக்கண்டு தேனூறும்…

ஆண் : நீ ஆடை அணிகலன் சூடும் அறைகளில்…
ரோஜா மல்லிகை வாசம்…
முக வேர்வைத் துளியது போகும் வரையிலும்…
தென்றல் கவரிகள் வீசும்…
நெஞ்சோரம் தள்ளாடும் முத்தாரம் எந்நாளும்…

ஆண் : நீதானே எந்தன் பொன்வசந்தம்…
புது ராஜ வாழ்க்கை நாளை உன் சொந்தம்…
என் வாசல் ஹே வரவேற்கும் அந்நேரம்…
உன் சொர்க்கம் ஹே அரங்கேறும் கண்ணோரம்…

—BGM—
 
┈┉┅━❀••🌿🌺🌿••❀━┅┉┈
Title: Re: இரவின் மடியில்
Post by: RajKumar on October 25, 2025, 12:22:53 PM
💫💕💕💕💕💕💫

*இரவின் மடியில்*

💫💕💕💕💕💕💫

*சிறு பொன்மணி அசையும்*
*அதில் தெறிக்கும் புது இசையும்*
*இரு கண்மணி பொன் இமைகளில் தாள லயம்*

சிறு பொன்மணி அசையும்
அதில் தெறிக்கும் புது இசையும்
இரு கண்மணி பொன் இமைகளில் தாள லயம்

*நிதமும் தொடரும் கனவும் நினைவும்* *இது மாறாது*
*ராகம் தாளம் பாவம் போல நானும் நீயும் சேர வேண்டும்*

சிறு பொன்மணி அசையும்
அதில் தெறிக்கும் புது இசையும்
இரு கண்மணி பொன் இமைகளில் தாள லயம் ...

*விழியில் சுகம் பொழியும்*
*இதழ் மொழியில் சுவை வழியும்*

*எழுதும் வரை எழுதும் இனி புலரும் பொழுதும்*

விழியில் சுகம் பொழியும்
இதழ் மொழியில் சுவை வழியும்

எழுதும் வரை எழுதும் இனி புலரும் பொழுதும்

*தெளியாதது எண்ணம்* *கலையாதது வண்ணம்*

தெளியாதது எண்ணம் கலையாதது வண்ணம்

*அழியாதது அடங்காதது அணை மீறிடும் உள்ளம்*

*வழி தேடுது விழி* *வாடுது கிளி பாடுது* *உன் நினைவினில்*

சிறு பொன்மணி அசையும்
அதில் தெறிக்கும் புது இசையும்
இரு கண்மணி பொன் இமைகளில் தாள லயம் ...

*நதியும் முழு மதியும் இரு இதயம்தனில் பதியும்*

*ரதியும் அதன் பதியும் பெறும் சுகமே உதயம்*

நதியும் முழு மதியும் இரு இதயம்தனில் பதியும்

ரதியும் அதன் பதியும் பெறும் சுகமே உதயம்

*விதை ஊன்றிய நெஞ்சம்* *விளைவானது மஞ்சம்*

விதை ஊன்றிய நெஞ்சம் விளைவானது மஞ்சம்

*கரை பேசுது கவி பாடுது கலந்தால் சுகம் மிஞ்சும்*

*உயிர் உன் வசம் உடல் என் வசம்*
*பயிரானது உன் நினைவுகள்*

சிறு பொன்மணி அசையும்
அதில் தெறிக்கும் புது இசையும்
இரு கண்மணி பொன் இமைகளில் தாள லயம்

நிதமும் தொடரும் கனவும் நினைவும் இது மாறாது
ராகம் தாளம் பாவம் போல நானும் நீயும் சேர வேண்டும்

சிறு பொன்மணி அசையும்
அதில் தெறிக்கும் புது இசையும்
இரு கண்மணி பொன் இமைகளில் தாள லயம் ...

💫💕💕💕💕💕💫

படம் : *கல்லுக்குள் ஈரம்*
பாடகர் : *இளையராஜா & ஜானகி*
பாடலாசிரியர் : *கங்கை அமரன்*
இசை : *இளையராஜா*

💫💕💕💕💕💕💫