FTC Forum

Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: MysteRy on August 20, 2025, 08:10:26 AM

Title: பெண்கள் தலையில் பூ வைக்க வேண்டும் என சொல்ல காரணமென்ன?
Post by: MysteRy on August 20, 2025, 08:10:26 AM
(https://i.ibb.co/wNM2FY1s/534497518-1234424735385418-3125594611350866447-n.jpg) (https://imgbb.com/)

பெண்கள் தலையில் பூ வைப்பதால் இவ்வளவு நன்மைகளா??

நம் முன்னோர்கள் கடைபிடித்து வந்த ஒவ்வொரு விஷயத்திற்கும் ஒரு ஆக்கப்பூர்வமான காரணங்கள் உள்ளன. அவை எல்லாமே நம்முடைய உடல்நலத்தை சார்ந்து இருக்கும். பெண்கள் தலையில் பூ வைத்து கொள்வதால் ஏற்படும் நன்மைகளை பற்றி பார்ப்போம்.

🌷 உலகம் முழுவதும் பல கோடிக்கணக்கான பூ வகைகள் உள்ளன. ஆனால் ஆயிரம் கோடிப் பூக்கள் மட்டுமே தற்போதைய நடைமுறையில் உள்ளன. அதிலும் 500 கோடி பூக்களே மருத்துவத்திற்கு பயன்படுத்தப்படுகின்றன.

பூக்களின் பயன்கள் :

🌷 ரோஜாப்பூ - தலைச்சுற்றல், கண் நோய் போன்றவற்றைக் குணப்படுத்தும்.

🌷 மல்லிகைப்பூ - மனஅமைதிக்கு உதவும். கண்களுக்குக் குளிர்ச்சி தரும்.

🌷 செண்பகப்பூ - வாதத்தைக் குணப்படுத்தும். பார்வைத் திறனை மேம்படுத்தும்.

🌷 பாதிரிப்பூ - காது கோளாறுகளைக் குணப்படுத்தும். செரிமானச் சக்தியை மேம்படுத்தும். காய்ச்சல், கண் எரிச்சல் போன்றவற்றைச் சரிசெய்யும்.

🌷 செம்பருத்திப் பூ - தலைமுடி தொடர்பான பிரச்சனைகளை சரிசெய்யும். உடல் உஷ்ணத்தைக் குறைக்கும்.

🌷 மகிழம்பூ - தலை சம்மந்தப்பட்ட பிரச்சனைகளைத் தீர்க்கும். பல் வலி, பல் சொத்தை உள்ளிட்ட பல் குறைபாடுகளை நீக்கும்.

🌷 வில்வப்பூ - சுவாசத்தை சீராக்கும். காச நோயைக் குணப்படுத்தும்.

🌷 சித்தகத்திப்பூ - தலை வலியைக் குறைக்கும். மூளையை சுறுசுறுப்பாக இயக்க உதவும்.

🌷 தாழம்பூ - நறுமணம் வீசுவதோடு சீரான தூக்கத்திற்கு உதவும். உடல் சோர்வை நீக்கும்.

🌷 தாமரைப்பூ - தலை சம்மந்தமான நோய்களை சரிசெய்யும். மனஉளைச்சலை நீக்கி மனஅமைதிக்கு வழிவகுக்கும். தூக்கமின்மையை நீக்கி, சீரான தூக்கத்தை ஊக்குவிக்கும்.

🌷 கனகாம்பரம்பூ - தலை வலி மற்றும் தலை பாரத்தைச் சரிசெய்யும்.

🌷 தாழம்பூ, மகிழம்பூ, சந்தனப்பூ, ரோஜாப்பூ செண்பகப்பூ போன்றவை வாதம், கபத்தைக் குறைக்கக் கூடியவை.

பூக்களைச் சூடுவதால் ஏற்படும் நன்மைகள் :

🌸 பூக்களில் உள்ள பிராண ஆற்றல், மூளைச் செல்களால் ஈர்க்கப்பட்டு, நாளமுள்ள மற்றும் நாளமில்லாச் சுரப்பிகளின் சீரான இயக்கத்திற்கு உதவுகிறது. இந்த பிராண ஆற்றலானது மனஅழுத்தத்தைக் குறைத்து, மனஅமைதிக்கு உதவுகிறது.

🌸 தலையில் பூ வைப்பது, மனமாற்றத்திற்கு உதவுகிறது. ஒரு விஷயத்தைப் பல கோணங்களில் பார்க்கும் தன்மையைக் கொடுக்கும். See