ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)
நண்பர்கள் கவனத்திற்கு ....   
சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...
இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால் 
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....
கவிதைகளுக்கான விதிமுறைகள் 
1-இங்கே நீங்கள்  சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. ( உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக  )..
2-தயவு செய்து  இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt  தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம் .
3-முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும். .
Updated on 26 Oct 2020:
4-நிகழ்ச்சி சிறப்புற தொகுத்து வழங்குவதற்கு ஏதுவாக,  உங்கள் கவிதைகள் 16 வரிகளுக்கு குறையாமலும் ,  60 வரிகளுக்கு மிகாமலும்   அமையும்படி எழுத வேண்டுமாய் அன்போடு கேட்டுக்கொள்கிறோம். 
விதிமுறை சேர்க்கப்பட்ட நாள் : 07-ஜூலை-2025
5-செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் (Artificial Interlligence) மூலம் உருவாக்கப்பட்டு பதிவு செய்யப்படும் கவிதைகள் இந்த நிகழ்ச்சியின் பண்பலை ஒளிபரப்பில் இடம் பெறாது என்பதை தெரிவித்து கொள்கிறோம். 
நிழல் படம் எண் : 379
இந்த களத்தின்இந்த  நிழல் படம்  FTC Team சார்பாக         வழங்கப்பட்டுள்ளது   ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...
.
உங்கள் கவிதைகளை  எதிர்வரும் புதன்கிழமை GMT நேரம் 5:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்
(https://www.friendstamilchat.org/Forummedia/forumimages/OU/379.jpg)
			
			
			
				அப்பாவின் தோள், மகளின் வலிமை!!!
கண்ணே கலங்காதே...
தோல்வி உன்னை சோதிக்க வந்ததே தவிர,
உன்னை தள்ளி விட வரவில்லை...
இன்று கண்ணீரால் நனைந்த உன் கண்கள், நாளை வெற்றியின் ஒளியால் ஜொலிக்கபோவதை, உன் அப்பா நான் பார்க்க வேண்டாமா?
தோல்வி வந்ததாலே வாழ்க்கை முடிந்துவிடாது...
அது சிறிய கற்கள் நிறைந்த பாதை மட்டுமே !!!
தாண்டிவிட்டால் வெற்றி நிச்சயம் ...
நீ விழுந்துவிட்டதை எண்ணாமல் முன் நோக்கி நடந்து செல்லடி கண்ணே !!!
அப்பா இருக்கிறேன் உன்னோடு...
மழை கொட்டிய பின்னே வரும் வானவில் மிக அழகாக இருக்கும், அதே போல உன் வாழ்க்கை பயணத்தில் வரும் சோதனை அனைத்தும் ஒரு நாள் சாதனையாக மாறும் என்பதை மனதில் வைத்து நகர்ந்து செல்...
உன் கனவுகள் உன்னை கைவிடாது.
நீ இன்னும் வலிமையோடு எழுந்து நிமிர்ந்தால்,
உலகமே உன்னை வியக்கும்.
என் கையை பிடி கண்ணே… நீ தடுமாறினாலும் உன் கனவுகளை நான் கைவிடமாட்டேன்...
உன் திறமை உன்னை விட்டு போகாது...உன் உழைப்புக்கு பலன் நிச்சயம் !!! நீ மீண்டும் எழுந்து நிற்பாய் , அப்பாவின் நிழல் உன் பின்னே எப்பொழுதும் இருக்கும் ...