FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: joker on August 18, 2025, 01:02:38 PM

Title: தொடரும்!
Post by: joker on August 18, 2025, 01:02:38 PM
ஒளியில்லா ஜன்னலருகில்
நிழல் போல நான்,
மௌனமாக
ஒவ்வொரு நரம்பிலும்
காயமடைந்த நினைவுகள்
கிறுகிறுக்கின்றன.

சிதைந்த சுவற்றில்
கரையும் கனவுகள்
மனதில் பாதுகாக்க பட்ட
நினைவுகளின் சிறகுகள் படபடகின்றன

எங்கோ எப்போதோ
முகவரி தொலைத்த
தன்னை
வெளிகாட்டிக்கொள்ள
விரும்பாத
புன்னகை

இருளின்
மண்டபத்தின் நடுவில்
அமைதியாக அலையும்
உள்ளக் கடல்.

முடிவில்லா
கேள்விக்குறிகளைத் தூக்கி
மரணத்தை
எதிர்பார்த்து நிற்கும்
விடியல்கள்

நினைவுகளால்
வறண்ட கண்களில்
ஒளிந்திருக்கும்
பைத்தியத்தின் சிறு கனல்
சிதைந்த கனவுகளின் நுனிகள்
இதயத்தைக் குத்திச்செல்லும்.

ஒவ்வொரு மூச்சிலும்
இருட்டே நிறைந்து விடுகிறது.

பகலின் முகம் மறைந்த இரவில்,
உறங்காத விழிகளுக்கு என்ன விருந்து?

மரணத்தின் நிழல்
என்னுள் விழும் வரை
இக்காத்திருப்பு
தொடரும்