FTC Forum

Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: MysteRy on August 16, 2025, 07:55:22 AM

Title: குடல்புண்ணை குணமாக்கும் பச்சை வாழைப்பழம்....
Post by: MysteRy on August 16, 2025, 07:55:22 AM
(https://i.ibb.co/W4RSsCZm/533401977-1231769728984252-3447536451953809643-n.jpg) (https://imgbb.com/)

சாதாரமாக கடையில் கிடைக்கும் பச்சை வாழைப்பழத்தில் இவ்வளவு பயன்களா...? என்று வாயைப் பிழந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. பச்சைப் பழங்கள் வயிற்றுப் பாதையில் உள்ள குடல் புண்களை ஆற்றும் தன்மையுடையது என்பதை படித்துப் பயன் கொள்ளுங்கள்....

* வயிற்றில் உள்ள குடல்களில் சுரக்கும் அமிலங்களும் நச்சுப் பொருட்களும் அரிப்பதன் காரணமாக குடல்புண் என்கிற அல்சர் ஏற்படுகிறது. பச்சை வாழைப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இந்த பாதிப்பில் இருந்து விடுபடலாம். குடல்களில் பழுதுபட்ட மெல்லிய சவ்வுத் தோல்களைச் விரைவில் வளரச் செய்து புண்ணை ஆற்றிவிடும் சக்தி பச்சை வாழைப்பழத்திற்கு உண்டு.

* வெண்டைக்காய் விதையைக் கொஞ்சம் பார்லி கஞ்சியில் போட்டு காய்ச்சி மூன்று நாள் வரை சாப்பிட்டு வந்தால் சிறுநீர் கழிக்கும்போது ஏற்படும் எரிச்சல் இல்லாமல் போகும்.

* உணவு சாப்பிடுவதற்கு 1/2 மணி நேரத்திற்கு முன்னதாக தினசரி அரை டீ ஸ்பூன் ஆலிவ் எண்ணெயைச் சாப்பிட்டு வந்தால், ரத்தக் குழாயில் கொழுப்பு படிவதை தடுக்கலாம்.

* வாய்ப் புண் உள்ளவர்களுக்கு காரம் ஆகாது. முடிந்தவரை காரத்தைக் குறைத்துச் சாப்பிடுங்கள். தேங்காய்த் துண்டுகளைச் சாப்பிட்டு வந்தால் எளிதில் வாய்ப்புண் ஆறும்.

* ஜாதிக்காயைச் சிறு சிறு துண்டுகளாகச் சீவி அதை நெய்விட்டு வறுத்து சாப்பிட்டு வந்தால் சீதளபேதி குணமாகும். இதற்கு சிகிச்சை மேற்கொள்ளும்போது தயிர், மோர், இளநீர் ஆகியவற்றை ஏராளமாகச் சேர்த்துக் கொள்வது நல்லது.

* இரவில் படுக்கப் போகும்முன் வெந்நீரில் சிறிது தேன் கலந்து அந்த நீரில் வாயைக் கொப்பளித்து வந்தால் பற்களுக்குத் தொந்தரவு கொடுக்கும் பாக்டீரியாக்கள் செத்துப் போகும். பற்களின் எனாமல் சிதையாமல் பாதுகாக்கப்படும்.

* மஞ்சளை ஒரு கல்லில் உறைத்து ஒரு சலவைச் சோப்புத் துண்டை அதில் குழப்பினால் சிகப்பாகப் பசைபோல் வரும். இதை வேனல் கட்டியின் மேல் பூச, வேனல் கட்டி உடைந்து சீழ் வெளியேறி விடும்.

* வெள்ளைப் பூசணிக்காய் சாறில் ஒரு கரண்டித் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் மூளைச்சோர்வு நீங்கும். சுறுசுறுப்பாக செயல்படலாம்.