FTC Forum

Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: MysteRy on August 14, 2025, 07:59:33 AM

Title: காலையில் எழுந்தவுடன் ஒரு கப் தண்ணீர்...நன்மைகளோ ஏராளம்...
Post by: MysteRy on August 14, 2025, 07:59:33 AM
(https://i.ibb.co/Df1b9Ks0/531743783-1229092569251968-666341514568226461-n.jpg) (https://imgbb.com/)

தினமும் காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பது நல்லது என பலரும் சொல்லக் கேள்விப்பட்டிருப்போம்.
ஆம், தண்ணீர் குடிப்பதால் எண்ணற்ற நோய்களில் இருந்து நம்மை பாதுகாக்கலாம்.

தினமும் தண்ணீர் குடிப்பதால் வயிறு சுத்தமாவதுடன், உடலில் உள்ள நச்சுக்கள் சிறுநீர், மலம் மூலம் வெளியேறிவிடும்.

பெரும்பாலான நபர்களுக்கு உடலில் நீர்ச்சத்து குறையும் போது தான் தலைவலி ஏற்படுகிறது, அத்தகைய நபர்கள் தினமும் தண்ணீர் குடித்து வருவது நல்லது.

குறிப்பாக காலையில் அவசர அவசரமாக வேலைக்கு கிளம்பும் நபர்கள், சாப்பிடாமல் செல்வது வழமையாகி விட்டது.

இவர்கள் தினமும் தண்ணீர் குடிக்கும் போது பசி எடுப்பதுடன் அல்சர் தொல்லையிலிருந்து தப்பிக்கலாம்.

வெதுவெதுப்பான தண்ணீரை குடித்தால் உடலின் மெட்டாபாலிசம் அதிகரிப்பதுடன், உண்ணும் உணவு விரைவில் செரிமானமாகிவிடும்.

மேலும் இரத்த சிவப்பணுக்களின் வளர்ச்சியானது அதிகரித்து, இரத்தமானது அதிகப்படியான ஆக்சிஜனை கொண்டிருப்பதால் உடலானது எனர்ஜியுடன் இருக்கும்.

எடையை குறைக்க நினைப்பவர்களுக்கு இது ஒரு சிறந்த வரப்பிரசாதம் என்றே சொல்லலாம். முகமும் பொலிவுடன் இருப்பதுடன், பருக்கள் வருவது குறைந்துவிடும்.