FTC Forum

தமிழ்ப் பூங்கா => பொதுப்பகுதி => Topic started by: MysteRy on August 12, 2025, 08:13:21 AM

Title: டால்பின் பற்றிய சில வியப்பான தகவல்கள்..
Post by: MysteRy on August 12, 2025, 08:13:21 AM
(https://i.ibb.co/j9SLQZ65/531072927-122246547380037466-5998140705094433115-n.jpg) (https://ibb.co/vCSJTvwB)

இந்தியாவின் தேசிய விலங்கு எது என்று கேட்டால் புலி என்று அனைவரிடம் இருந்தும் பதில் வரும். இந்தியாவின் தேசிய பறவை எது என்று கேட்டால் மயில் என்று பதில் கிடைக்கும். அதே போல, இந்தியாவின் தேசிய மலர், என்று கேட்டால் சட்டென்று தாமரை என்று கூறுவர். ஆயினும் இந்தியாவின் தேசிய நீர்வாழ் உயிரினம் எது ? என்று கேட்டால் பலருக்கும் தெரியாது. பள்ளி மாணவர்களுக்கு படித்த பெரியவர்களுக்கும் தெரியாது. இந்தியாவின் தேசிய நீர்வாழ் உயிரினம், தெற்காசிய நதி வாழ் டால்பின்கள்.

1) கங்கை, பிரம்மபுத்ரா, சிந்து நதிகளில் வாழும் இந்த டால்பின்கள், இந்தியா, பங்களாதேஷ், பாகிஸ்தான், நேபாளம் போன்ற நாடுகளில் காணப்படுகின்றன.

2)டால்பின்கள் என்றாலேயே கடலில் வாழும் உயிரினம் என்று நினைத்தவர்களுக்கு இந்த தகவல் ஆச்சரியமாக இருந்தாலும் அது தான் உண்மை.

3)பல நூற்றாண்டுகளாக இந்த டால்பீன்கள் நதிகளில் வாழ்ந்து வந்தாலும், 19ஆம் நூற்றாண்டில்தான் உயிரியல் ஆராய்ச்சியாளர்களின் கவனத்தை ஈர்த்தது. அதன் பிறகு இந்த டால்பின்கள் தனி இனமாகவே கருதப்பட்டு வந்தது.

4)கடல் வாழ் டால்பின்களைப் போல நீண்ட மூக்கைக் கொண்டிருந்தாலும் இவற்றின் கண்பார்வை கடல் டால்பின்களைப் போல கூர்மையானதல்ல. ஆண் டால்பின்கள் 2 முதல் 2.2 மீட்டர் அளவுக்கும், பெண் டால்பின்கள் 2.4 முதல் 2.6 மீட்டர் அளவுக்கும் வளரக் கூடியவை. இவை டிசம்பர்& ஜனவரி வாக்கிலும், மார்ச் முதல் மே மாதம் வரையிலும் குட்டி போடும்.

5) மீன் பிடிக்கும் வலைகள் இவற்றுக்கு கடுமையான பாதிப்பு ஏற்படுகின்றது. இதுமட்டுமல்லாமல்
எண்ணற்ற அணைகள் கட்டப்படுவதால் இவற்றின் இனப்பெருக்கம் பாதிக்கப்படுகின்றது.

6)சமீபத்தில் இந்திய அரசும், எண்ணற்ற சர்வதேச அமைப்புகளும் நதிவாழ் டால்பின்களைப் பாதுகாக்க தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. சர்வதேச அளவில் பாதுகாக்கப்பட வேண்டிய அரிய வகை உயிரினங்களின் பட்டியலில் இந்த டால்பின் இடம்பெற்றுள்ளது.