FTC Forum

Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: MysteRy on August 07, 2025, 08:35:10 AM

Title: முருங்கைகீரையின் பக்குவமான 12 மருத்துவ குறிப்புகள்...
Post by: MysteRy on August 07, 2025, 08:35:10 AM
(https://i.ibb.co/8ndTnLtb/527691532-1223135103181048-6888195067793891851-n.jpg) (https://imgbb.com/)

முருங்கைக்காய் போன்றே முருங்கைகீரையிலும் ஏராளமான சத்துக்கள் அடங்கியுள்ளன.
வாரத்திற்கு இருமுறையாவது இதனை உணவில் சேர்த்துக்கொள்வதால் நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும்.

1.முருங்கை கீரையால் உட்சூடு, மந்தம், தலைநோய், மூர்ச்சை, வெறிநோய், கண்ணோய் போன்ற நோய்கள் நீங்கும்.

2.முருங்கையை சமைத்து சாப்பிட்டால் உடல் வலுப்பெறும்.

3. இரத்தம் சுத்தமாகும். முருங்கை கீரையில் அதிகமாக இரும்பு சத்து மற்றும் கல்சியம் உள்ளது.

4. உடல் மெலிவாக இருப்பவர்கள் வாரம் இரண்டு முறை முருங்கை கீரையை உண்டு வந்தால் உடல்-தேறும்.

5.முருங்கை இலையில் விட்டமின் A, B, C, கால்ஷியம், இரும்புச்சத்து நிறைந்துள்ளது.

6.ஒரு கிண்ணம் முருங்கை சாறில் 9 முட்டை அல்லது அரைக்கிலோ வெண்ணை அல்லது 8 டம்ளர் பாலில் அடங்கி இருக்கும் விட்டமின் A உள்ளது.

7.வயிற்று புண்ணை ஆற்றும். அஜீரண கோளாறுகளை போக்கி மலச்சிக்கலை நீக்கும்.

8.இரத்தத்தில் கலந்து இருக்கும் தேவையில்லாத நீர்களை பிரித்து வெளியேற்றும்.

9. சிறுநீரை பெருக்குவதால் உயர் ரத்த அழுத்த நோய் இருப்பவர்கள் பக்க விளைவு ஏற்படுத்தும் மாத்திரைகளை தினமும் எடுத்து கொள்வதிலிருந்து தப்பிக்கலாம்.

10.உடல் சூட்டை குறைக்கும், கண் பார்வை நரம்புகள் வலுப்பெறும். பித்தத்தை குறைக்கும்.

11.இளநரையை நீக்கும் உடல் சருமத்தை பளபளக்க செய்யும்.

12.தாய்ப்பாலை அதிகமாக ஊறவைப்பதால், குழந்தை பெற்றெடுத்த தாய்மார்கள் கண்டிப்பாக உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.