FTC Forum

Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: MysteRy on August 07, 2025, 08:33:52 AM

Title: மண்பானை சமையலில் கிடைக்கும் ஆரோக்கியங்கள்...
Post by: MysteRy on August 07, 2025, 08:33:52 AM
(https://i.ibb.co/VYXcBq5h/528747778-1223133206514571-4710987319473641052-n.jpg) (https://imgbb.com/)

மண்பானை சமையல் என்றாலே அப்படியென்றால் என்ன? என்று தான் இன்றைய தலைமுறையினர் கேட்பார்கள்.
அந்த அளவிற்கு நவீனமாய் மாறிப்போய்விட்ட உலகில் கிடைக்கும் அலுமினியம், சில்வர், மைக்ரோஓவன் போன்றவற்றில் மக்கள் மூழ்கிவிட்டார்கள்.

ஆனால், இவற்றில் சமைத்து உண்ணும் உணவினை விட மண்பானை சமையல் உடலிற்கு ஆரோக்கியத்தை வழங்கும்.

இதனால் தான் அந்தகாலத்தில் எல்லாம் நம் முன்னோர்கள் அதிக வயது உயிர் வாழ்ந்தனர்.

மண்பானைகளில் சமைக்கும் போது உணவின் மீது வெப்பம் சீராக, மெதுவாக பரவுகிறது. இது உணவை சரியான முறையில் சமைக்க உதவுகிறது.

மேலும் மண்பானைகளில் உள்ள நுண்துளைகள் மூலம் நீராவி, காற்று உணவில் ஒரே சீராக ஊடுருவி உணவை சமைக்க உதவுகிறது.

இதனால் மண்பானைகளில் சமைக்கும் உணவு ஆவியில் வேக வைத்த உணவைப்போன்ற தன்மையை பெறுகிறது. இது உடல் நலனுக்கு உகந்தது.

இதனால் உணவில் உள்ள சத்துகள் பாதுகாக்கப்பட்டு, எளிதில் செரிமானமாகும் தரமான உணவு கிடைக்கிறது. மண் பாத்திரங்கள் உணவில் உள்ள அமிலத் தன்மையை சமப்படுத்தும் தன்மை கொண்டவை.

உப்பு, புளிப்பு சுவையுடைய உணவுகள் சமைக்கும் போது, மண்பானை தீங்கான விளைவுகள் எதையும் ஏற்படுத்துவதில்லை.

ஆனால் உலோக பாத்திரங்கள் உணவுடன் வினைபுரியும் நிலை உள்ளது. மண்பானையில் சமைக்கும் போது, அதிக எண்ணெய் பயன்படுத்தவும் தேவையில்லை. எனவே மண்பானையில் சமைக்கும் உணவு மிகவும் ஆரோக்கியமானதாகும்...