FTC Forum

Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: MysteRy on August 05, 2025, 08:02:53 AM

Title: முள்ளங்கி சாறு குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
Post by: MysteRy on August 05, 2025, 08:02:53 AM
(https://i.ibb.co/mrh0fvLh/526658099-1220585633435995-3898585978641479478-n.jpg) (https://imgbb.com/)

நரம்புத்தளர்ச்சியை போக்கி, உடலுக்கு சக்தியை தரும் முள்ளங்கியை அன்றாடம் உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள்.

மேலும், சிறுநீரகத்தில் உள்ள கற்களை கரைக்கும் தன்மையும் உண்டு.

அடங்கியுள்ள சத்துக்கள்

முள்ளங்கியில் பைபர், ரிபோபிளேவின், பொட்டாசியம், காப்பர், விட்டமின் பி6, மக்னீசியம், கால்சியம், மாங்கனீஸ் போன்ற சத்துக்கள் அடங்கியுள்ளன.

மருத்துவ பயன்கள்

முள்ளங்கியை சாம்பார், பொரியல், கத்தரி வறுவல் உள்ளிட்ட பல உணவு வகைகளாக சமைத்து சாப்பிடலாம். முள்ளங்கி சாறில், நோயை குணப்படுத்தும் ஆற்றல் இருக்கிறது.

மூல நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தினந்தோறும், ஒரு டம்ளர் முள்ளங்கி ஜூஸ் குடித்து வந்தால், விரைவில் நோய் குணமாகும்.

இதனை தொடர்ந்து குடித்து வந்தால், வெகுநாளாக சரியாகாத மூலநோய் கூட, பூரணமாக குணமடைய வாய்ப்புள்ளது.

குழந்தைகளுக்கு, சிறு வயதிலிருந்தே முள்ளங்கியை உணவில் சேர்த்து வந்தால் ஞாபக சக்தி பெருகும், மூளை சிறந்த வளர்ச்சி அடையும்.

முடி உதிர்தல் மற்றும் பொடுத்தொல்லை போன்ற பிரச்சனைகளுக்கு முள்ளங்கி சாறு நல்ல தீர்வு தருகிறது.

தைராய்டு கோளாறுகள் இருப்பவர்கள் சிவப்பு முள்ளங்கி சாற்றினை குடிக்கலாம்.

ஆன்ந்தோசயனின்(anthocyanins) மற்றும் போலிக் ஆசிட்(Folic Acid) நிறைந்துள்ளதால் புற்றுநோயை எதிர்த்து போராடுகிறது.

முள்ளங்கி சாறு நீண்ட காலமாகத் தொல்லை தரும், வாயுக் கோளாறுகளை விரட்டவும் மற்றும் பேதி, தலைவலி, தூக்கமின்மை ஆகிய துன்பங்களில் இருந்து விடுதலை பெறவும் பயன்படுத்தப்படுகிறது.

முள்ளங்கி சாற்றோடு சர்க்கரை சேர்த்து அருந்துவதால் இருமல் குணமாகும். மேலும் பலவித ஈரல் நோய்களுக்கும் இது பலன் தரும்.