FTC Forum

Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: kanmani on April 19, 2012, 02:33:38 PM

Title: நரம்புக் கோளாறுகளை குணமாக்கும் செலரி தண்டுகள்
Post by: kanmani on April 19, 2012, 02:33:38 PM
நரம்புக் கோளாறுகளை குணமாக்கும் செலரி தண்டுகள்

செலரி என்ற கீரை வகையானது சீனாவில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. நம் ஊரில் கொத்தமல்லியை உணவில் பயன்படுத்தப்படுவதைப்போல இந்த செலரி கீரை சீனாவில் பயன்படுத்தப்படுகிறது. கி.மு. 5ஆம் நூற்றாண்டில் இருந்தே செலரியை இவர்கள் அறிந்திருக்கிறார்கள். ஐரோப்பாவிலும் இதே காலகட்டத்தில் செலரியைப் பயிர் செய்திருக்கிறார்கள்.

செலரியின் மருத்துவக் குணங்களுக்காகத் 300 ஆண்டுகளாகவே உலகம் முழுவதும் தோட்டங்களில் வளர்க்க ஆரம்பித்துள்ளனர். தற்போது இந்தியாவிலும் இந்த கீரை அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. செலரியின் இலை, இலைத் தண்டு, இலைக் காம்பு முதலியவை உணவாக உபயோகப் பயன்படுத்தப்படுகின்றன. சாலட்களிலும், காலிப்ளவர், காளான் மஞ்சூரியன் உணவுகளிலும் அதிகம் சேர்க்கப்படுகிறது.

செலரியில் உள்ள சத்துக்கள்

செலரியில் 88 சதவிகிதம் நீர்ச்சத்து உள்ளது, புரதம், கொழுப்பு, நார்ச்சத்து, மாவுப்பொருள், தாது உப்புக்கள், கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து போன்றவை காணப்படுகின்றன. இவற்றுடன் வைட்டமின் - 'ஏ', வைட்டமின் - 'பி' வைட்டமின் - 'சி' போன்றவையும் இருப்பதால் இது ஓர் அடிப்படை உணவும் ஆகிறது. செலரியில் மக்னீசியமும், இரும்புச் சத்தும் அதிக அளவில் காணப்படுகின்றன.

சாலட் சத்துக்கள்

மிகவும் நறுமணமுள்ள செலரியினை மற்றக் காய்கறிகளுடன் சேர்த்துச் சமைத்தால் மணமும் ருசியும் முன்னணியில் நிற்கும். வெள்ளரிக்காய், தக்காளி, முள்ளங்கி, காரட் போன்றவற்றை சிறு துண்டுகளாக வெட்டிப் போட்டு சாலட் செய்வார்கள். இதில் செலரியின் இலைகளையும், தண்டுகளையும் வெட்டிப் போட்டு எலுமிச்சைச் சாற்றையும் கலக்க வேண்டும். பச்சைக் காற்கறிகள் சேர்த்த இந்த சாலட் சத்துணவாக ஆகிவிடுகிறது.

இதயநோய்கள் குணமடையும்

இதயமும், இதயத்திற்குச் செல்லும் நரம்புகளும் தடையின்றி இயங்க மக்னீசியம் கூடுதலாகத் தேவை. அந்தத் தேவையை செலரியில் உள்ள மக்னீசிய உப்புகள் பூர்த்தி செய்துவிடுகின்றன. இதனால் நெஞ்சுவலி, மாரடைப்பு போன்றவை ஏற்படாமல் முன்கூட்டியே தடுக்கப்படுகின்றன. இரத்த சோகை, லூகேமியா முதலிய நோய்கள் உடனே குணமாகின்றன.

இரத்த விருத்தியும் விரைந்து ஏற்படுகிறது. செலரியில் உள்ள தாது உப்புக்களால் இரத்தத்தில் புளிப்பு ஏற்பட்டு இரத்தம் கெட்டுவிடுவது தடுக்கப்படுகிறது. அத்துடன் இரத்தத்தில் நஞ்சுப் பொருள்கள் சேர்வதும் தடை செய்யப்படுகிறது. மேலும் கீல் வாதம், ஊளைச் சதை நோய் போன்றவையும் குணப்படுத்தப்படுகின்றன.

ரத்த அழுத்தம் குணமடையும்

உணவு செரிமானமின்மை, ஆஸ்துமா, இரத்த சோகை, சாகேமியா, உடற் பலவீனம், இதய நோய்கள், சிறுநீரகத்தில் கற்கள் உருவாதல், தூக்கமின்மை, மூட்டு வாதம், ஊளைச்சதை, நரம்புக் கோளாறுகள், உயர் இரத்த அழுத்தம் முதலிய நோய்களை செலரித் தண்டுகள் குணப்படுத்துகின்றன. அளவுடன் செலரியை சாப்பிட்டு வந்தால் இரத்த அழுத்த நோயைப் பரிபூரணமாகக் குணமாக்கிக் கொள்ளலாம்.

புற்றுநோய்க்கு செலரிசூப்

செலரியின் தண்டுகளையும் இலைகளையும் சூப்பாகத் தயார் செய்து சாப்பிடலாம்; இல்லை எனில் சாறாக மாற்றி அருந்தலாம். புற்றுநோய், நுரையீரல் அழற்சி, ஆஸ்துமா, தொண்டை தொடர்பான நோய்கள் ஆகியன குணமாகச் செலரி சூப் அருந்த வேண்டும். அல்லது இலை, தண்டு ஆகியவற்றுடன் சிறிதளவு நீர் சேர்த்து வதக்கி அடுப்பிலிருந்து இறக்கிச் சாப்பிட வேண்டும்.

நரம்பு நோய்களுக்கு செலரி சாறு

செலரித் தண்டு, இலை ஆகியவற்றின் சாற்றை காரட் சாறுடன் தினமும் ஒரு வேளை அருந்தினால் நரம்பு நோய்கள் குணமாகும்.வலிப்பு நோயால் ஏற்பட்ட இசிப்பு நோய், நரம்புத் தளர்ச்சி நோய் முதலியவை குணமாகும். செலரியின் விதையும் மருத்துவக் குணங்கள் நிரம்பியது. அதைக் சாறாக்கி வாத நோய்க்காரர்கள் அருந்தலாம்.

சிறுநீராக கற்கள் கரையும்

செலரியின் கொட்டைகள் சிறுநீர் நன்கு பிரிய பயன்படுகின்றன. வயிற்றுப் பொருமலைக் குணமாக்குகின்றன. இந்த விதைகளைக் காயவைத்து இடித்துத் தூளாக வைத்துக்கொண்டு தேனுடன் கலந்து சாப்பிட வேண்டும். தாம்பத்திய வாழ்க்கையில் ஆர்வம் ஏற்படும்.

மூட்டுவீக்கம் குணமாகும்

சோடியம் உப்பு அதிகமாய் இருப்பதால் இது மூட்டு வீக்க நோய்களுக்கு மருந்தாகவும் பயன்படுகிறது. இலைகளையும் மெல்லிய தண்டுகளையும் சாறாக்கி அருந்த வேண்டும். இந்த முறையில் அருந்தினால் மூட்டு வீக்கம் குணமாகும்.சிறுநீரில் கற்கள் உருவாகாமல் இருக்கவும் இத்தண்டு பயன்படுகிறது. வாரத்திற்கு நான்கு நாள்களாவது செலரியைச் சமையலில் சேர்த்தால் சிறுநீரகத்தில் கற்கள் ஏற்படா. கற்கள் இருந்தாலும் இது கரைத்துவிடும்.

உடல் பலம் பெறும்

செலரியின் வேரைக் காய வைத்துப் பொடியாக இடித்து வைத்துக் கொள்ள வேண்டும். ஒரு தேக்கரண்டி பொடியுடன் அதே அளவு தேனும் சேர்த்துச் சாப்பிட வேண்டும். தினமும் இரண்டு வேளை இப்படிச் சாப்பிட்டால் உடல் பலன் பெறும். உடல் பலவீனமானவர்களுக்கும் சத்துணவுக் குறைவால் ஊட்டம் இல்லாமல் இருப்பவர்களுக்கும் இது எளிய டானிக் ஆகும்