FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Thooriga on August 04, 2025, 04:24:35 PM

Title: "நீயும் தெரிந்து கொள்"
Post by: Thooriga on August 04, 2025, 04:24:35 PM
"நீயும் தெரிந்து கொள்"

சில வார்த்தைகள் பேசியதும் தான்,
உன்னுள் ஒரு அமைதியை பார்த்தேன்...
அழகான நிமிடங்களில், 
நான் உன்னில் என் கவனத்தை தொலைத்தேன்...

உன்னோடு பேசும் ஒவ்வொரு கணமும்,
எனக்குள் ஒரு புது அர்த்தம் பெற்றது.
அது நட்பு என்றே தொடங்கியது...
ஆனால் நான் உணர்ந்தது அதைவிட ஆழம்.

நான் எதிர்பார்த்தது நேர்மையான உறவு,
பொய்யான கனவல்ல...
ஆனால் இப்போது உன் மௌனம், 
ஒரு பதிலா சொல்லி விடுகிறது...

உன்னை பற்றி சிந்தித்த என் வார்த்தைகள்
இப்போது நீ அழித்த உரையாடல்களுக்குள்
முடங்கிப் போயிற்று...

"சும்மா" என்ற உன் பதில், 
எனது உணர்வுகளைச் சும்மா வைக்கவில்லை...

இன்னும் உன்னைப் பற்றி 
வெறுப்போ இல்லையோ தெரியாது... 
ஆனால் வலியே உண்மையா இருக்கிறது.

நான் குறை இருக்கலாம், 
ஆனால் உண்மை இல்லையென்றல்ல...

நீ என்ன உணர்ந்தாயோ தெரியவில்லை... 
ஆனால் நான் உன்னை உணர்ந்தேன். 
இது ஒரு குற்றமா?

நீயும் தெரிந்து கொள் — 
நீ ஒரு பக்கம் விட்டுச் சென்றாலும், 
நான் இன்னும் என் மனதில் 
நீ விட்ட பாதையை துடைக்கவில்லை...

Title: Re: "நீயும் தெரிந்து கொள்"
Post by: joker on August 04, 2025, 09:54:00 PM
வணக்கம் தூரிகா

அழகான கவிதை ,

மௌனமாய் நின்ற நிமிடங்களில்,
மழைத்துளி போல விழுகின்றன சில நினைவுகள்
என்ன செய்ய


நல்லதே நடக்கும் என நம்புவோம்

Title: Re: "நீயும் தெரிந்து கொள்"
Post by: Thooriga on August 06, 2025, 08:48:19 AM
Nandri