(https://i.ibb.co/1f8qcrG8/525344034-122244472964037466-1152771155804529341-n.jpg) (https://ibb.co/d0G2ZP4G)
#சதுரங்கம்♟️♟️♟️
கருப்பு வெள்ளை கட்டம்..
அதில் ஏகப்பட்ட சட்டம்..
ராஜா காலத்து ஆட்டம்..
ராஜாவை காப்பதே இதில் ஆட்டம்..
முன்னால் போகும் காலாட்படை..
குறுக்கே பாயும் மந்திரிபடை...
தாவி குதிக்கும் குதிரைப்படை..
ஏறி மிதிக்கும் யானைப்படை..
கட்டுப்பாடு இல்லாத "ஒற்றை" ராணி..
1) வாழும் வரை போராடு..
கட்டம் சரியில்லையின்னு சொல்லாதே.
2) பொறுமையாய் காய்களை நகர்த்த வேண்டும்.
3) நாம் எங்கே தவறு செய்வோம் என்று ஒரு கும்பலே காத்திருக்கும்.
4) அதிலும் ராணிக்குத் தான் முழு அதிகாரம். என்னதான் ராஜா ஆட்டத்தின் முக்கிய குறி என்றாலும் அனைவரும் முதலில் கவர நினைப்பது ராணியை தான்.
5) கூட்டமாக இருக்கும் வரை பயம் இல்லை, தனியே வெளியே வந்து விட்டால் எதிரணியின் மொத்த காய்களும் அதை அழிக்கவே முயலும்.
6) விழுந்தவுடன் எழும் குதிரையாய் இருக்கும் வரை தடைகளை தாண்டி போகலாம் எதுவும் நம்மை தடுக்க முடியாது.
7) ஏதோ ஒரு மூலையில் ஏதோ ஒரு சமயம் நாம் வெட்டாமல் விட்ட காய் சரியான நேரத்தில் நமது முக்கியமான காயை வெட்டும் போது தான் தெரியும் யாரையும் அலட்சியமாக நினைக்க கூடாது என்று.
8 ) ராஜா சரியான நேரத்தில் நகராமல் இருந்தாலும் சரி தவறான நேரத்தில் நகர்ந்தாலும் சரி ஆபத்துதான். மண்டை பத்திரம்.
9) நம்ம ராஜ்யத்தில் எப்போதுமே ரணகளம் தான். மான் கராத்தே தெரிந்திருக்க வேண்டும்....
ஆயுதத்தின் பலம்
புத்தியின் கூர்மையோடு
விரல்கள் விளையாடுமெனில்
சதுரங்க வீணையில்
எந்த ஸ்வரமும் சாத்தியமே..