FTC Forum

Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: MysteRy on July 30, 2025, 08:17:50 AM

Title: பாட்டி வைத்தியம்....
Post by: MysteRy on July 30, 2025, 08:17:50 AM
(https://i.ibb.co/WN1nKwVB/524320829-1216231867204705-1319622396754488164-n.jpg) (https://imgbb.com/)

1) முருங்கைகீரையை காம்புடன் சேர்த்து ரசம் வைத்து அடிக்கடி சாப்பிட்டு வந்தால் அசதி குறையும்.

2) கண்களில் எந்த நோய் தென்பட்டாலும் அண்ணாசிபழம் அடிக்கடி சாப்பிட்டு வந்தால் குணமாகும்.

3) அகத்திக்கீரையை சூப் செய்து அடிக்கடி சாப்பிட்டு வந்தால் கண்களில் நீர் வடிதல், கண் நோய்கள் குணமாகும்.

4) ஆவாரம் பூவை இரவு படுக்கும் முன் கண்களில் கட்டிக்கொண்டு படுத்தால் கண் நோய்கள் குணமாகும்.

5) வல்லாரை கீரை, தேங்காய் பால், மிளகு, சீரகம், சேர்த்து சமைத்து அடிக்கடி சாப்பிட்டு வந்தால் மூலம் குணமாகும்.

6) முருங்கைக்காய் நசுக்கி சாறெடுத்து அதில் சம அளவு தேன் கலந்து தினமும் காலையில் சாப்பிட்டால் சளி நீங்கும்.

7) இஞ்சி சாற்றை கொதிக்க வைத்து அதே அளவு தேன் ஊற்றி ஆற வைத்து தினசரி உணவுக்குப் பின் சாப்பிட்டு வந்தால் பருத்த உடல் குறையும்

8 ) சுக்கு, ஆவாரம் பட்டையும் சம அளவு எடுத்து சிறிதளவு நீர் விட்டு காய்ச்சி ஆற வைத்து சாப்பிட்டால் கை, கால் வலி குணமாகும்.

9) ஏலக்காயைப் போடி செய்து தினமும் காலை, மாலை நெய் கலந்து சாப்பிட்டு வந்தால் சளி விரைவில் நீங்கும்

10) பசும்பால், சிறிதளவு ஓமம் போட்டு காய்ச்சி அடிக்கடி காலையில் குடித்து வந்தால் தொண்டை வலி, தொண்டை அடைத்தல் நீங்கும்.