(https://i.ibb.co/HL3j3DVr/524127314-122244141242037466-7789571712545693294-n.jpg) (https://imgbb.com/)
உன்னை நீ வெறுக்காதே..
உனக்கான காலம் வரும் மயங்காதே
உள்ளத்தில் நீ வெம்பாதே
உயர்கின்ற நாள் வரும் மருகாதே
உறவுகளை நீ நம்பாதே.
உழைக்கத் தெம்புண்டு வாடாதே
உணர்வுகளை நீ இழக்காதே
உனக்காக தெய்வமுண்டு கலங்காதே
உலகத்தைக் கண்டு நீ பயப்படாதே
உண்மையைச் சொல்லத் தயங்காதே.
உறக்கத்தை நீ தொலைக்காதே
உடல்நலத்தை அதனால் கெடுக்காதே
உக்கிரத்தை நீ வளர்க்காதே
உன் மதிப்பை கோவத்தில் இழக்காதே
உதயத்தை நீ இருளாக்காதே.
உன் கடமையைச் செய்யாமல் இருக்காதே
உணர்ச்சியின்றி நீ கிடக்காதே
உரிமையிழந்து கண்ணீர் வடிக்காதே
உன் திறமைய மூடி மறைக்காதே
உனக்கொரு சரித்திரமுண்டு மறவாதே..!
NiYa Sista thank you 😍
(https://media.tenor.com/BxibqUT9-I0AAAAM/dudu-flower.gif)