FTC Forum

Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: MysteRy on July 29, 2025, 08:15:24 AM

Title: கறிவேப்பிலை சாப்பிட்டால் புற்றுநோய் வராது...
Post by: MysteRy on July 29, 2025, 08:15:24 AM
(https://i.ibb.co/JFQLRJJb/524662608-1214607204033838-6677826445038952553-n.jpg) (https://imgbb.com/)

அனைவருக்கும் கறிவேப்பிலையானது உணவிற்கு வாசனையை தர தான் பயன்படுகிறது என்று தெரியும். அதனால் அதனை சாப்பிடும் போது அதனை எடுத்து கீழே போட்டுவிடுகிறோம். ஆனால் இனிமேல் அப்படி செய்யாதீர்கள். ஏனெனில் கறிவேப்பிலை சாப்பிட்டால் புற்றுநோய் வராது என்று சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

அதிலும் கறிவேப்பிலையில் கோயினிஜாக், குளுகோசைட், ஒலியோரெசின், ஆஸ்பர்ஜான் சொரின், ஆஸ்பார்டிக் அமிலம், அயாமைன், புரோலைன் போன்ற அமினோ அமிலங்கள் மற்றும் வைட்டமின் ஏ, பி, சி, கால்சியம் போன்றவைகளும் உள்ளன. இதனால் தான் இதில் பல்வேறு மருத்துவ குணங்கள் இருப்பதோடு, நல்ல மணத்தையும் தருகிறது.

இத்தகைய குணங்கள் நிறைந்த கறிவேப்பிலையை ஆஸ்திரேலிய உணவியல் அறிஞர்கள் ஆராய்ந்து, உணவில் கறிவேப்பிலையை சேர்த்து வந்தால், புற்றுநோயை ஆரம்பத்திலேயே தடுக்க முடியும் என்று கண்டறிந்துள்ளனர். மேலும் இது ஒரு சிறந்த ஆன்டி-ஆக்ஸிடண்ட்டாக இயங்குகிறது என்றும் கூறுகின்றனர். இதனால் புற்றுநோய், இதய நோய்களின் தாக்கத்தைக் குறைப்பதோடு, ஞாபக சக்தியும் எளிதில் கிடைக்கிறது.

மேலும் கறிவேப்பிலையையும், கடுகையும் தாளிக்க பயன்படுத்தினால் நன்மை உண்டா? என்று திருவனந்தபுரத்திலுள்ள கேரளா யூனிவர்சிட்டியில் உள்ள மருத்துவ குழுவினர் ஆராய்ந்தனர். அதில் கறிவேப்பிலையும், கடுகும் நமது திசுக்களை அழிவிலிருந்து பாதுகாக்கிறது என்றும், பிரிரேடிக்கல்ஸ் உருவாவதை தடுக்கிறது என்றும் கூறுகின்றனர். மேலும் பிரிரேடிக்கல்ஸ் உருவாவதால் தான் டி.என்.ஏ. பாதித்து செல்களிலுள்ள புரோட்டின் அழிந்து, அதன் விளைவாக புற்றுநோய், வாதநோய்கள் தோன்றுகின்றன என்றும் கண்டறிந்துள்ளனர்.

இது தவிர நீரிழிவு நோயாளிகள் தினமும் கறிவேப்பிலையை மென்று, அதன் சாற்றை விழுங்கி வந்தால், நீரிழிவிற்கு சாப்பிட வேண்டிய மாத்திரையின் அளவு பாதியாக குறையும் என்றும் மருத்துவர்கள் கூறுகிறார்கள்.