(https://i.ibb.co/F4KxZx98/523247808-122243590760037466-4366825453564338766-n.jpg) (https://imgbb.com/)
பாம்பு கடிச்சதும் கடிப்பட்ட இடத்துக்கு மேல டைட்டா கட்டு போடுறது காலங்காலமா நடக்குற விசயம். அப்படி செய்யக்கூடாது. டைட்டா கட்டினா விஷம் அந்த இடத்துலயே நின்னு அந்த இடம் அழுகி போகிட வாய்ப்புண்டு. அதனால, லேசா கட்டுப்போட்டா போதும். சிலர் கடிப்பட்ட இடத்தை கீறி ரத்தத்தை வெளில எடுக்க பார்ப்பாங்க. அப்படி செய்யுறதும் தப்பு. வாயால ரத்தத்தை உறியுறதும் தப்பு. அது விஷத்தை இன்னொருத்தர் உடம்புல பாய வாய்ப்பிருக்கு. அதுமட்டுமில்லாம கடிப்பட்ட இடத்துல பாக்டீரியாவை அதிகரிக்க செய்யும். ஐஸ்பேக்லாம் வைக்கக்கூடாது. பாம்பு கடிப்பட்டவரை பதட்டமடைய விடாம ஆறுதலா பேசி ரிலாக்சா வச்சிருக்கனும். இது கொஞ்சம் கஷ்டம்தான். ஆனா இப்படி செய்யுறது அவங்க ரத்த ஓட்டத்தை குறைக்க உதவும். இதனால விசம் உடம்புல பாயும் நேரம் குறைக்க உதவும். கடிப்பட்டவரை தூக்கிட்டு ஓடக்கூடாது. அலுங்காம, குலுங்காம பச்சை குழந்தை மாதிரி கொண்டு போகனும்.. கடிப்பட்ட இடத்திலிருந்து ரத்தம் வந்தால் அப்படியே வடிய விடனும், ரத்தத்தை கட்டுப்படுத்த முயற்சிக்க கூடாது. ஏன்னா, விஷம் ஏறிய ரத்தம்தான் முதலில் வெளிய வரும். கடிப்பட்ட இடத்தை நிறைய தண்ணியும் சோப்பும் கொண்டு கழுவனும். ஹாஸ்பிட்டலுக்கு கொண்டு போகும்போது படுக்க வெச்சுதான் கொண்டுபோகனும். பாம்பு முதலான விஷக்கடிக்கு அரசு மருத்துவமனைகளே நல்லது. தனியார் ஹாஸ்பிட்டலுக்கு கொண்டு போறதாக இருந்தால் முதலிலேயே போன்ல விவரம் சொல்லி பாம்புக்கடிக்கு ட்ரீட்மெண்ட் தருவாங்களான்னு கேட்டுடுறது நல்லது. இது வீண் அலைச்சலை தடுக்கும். பாம்பு கடிப்பட்டவர்கிட்ட கடிச்ச பாம்பு எப்படி இருந்துச்சுன்னும் என்ன பாம்புன்னும் முதல்லியே கேட்டு தெரிஞ்சுக்குறது நல்லது. அப்பதான் டாக்டர் சீக்கிரமாவும், சரியாவும் ட்ரீட்மெண்ட் கொடுக்க வசதியா இருக்கும்.
நாகபாம்பு இல்லை கருநாகம் கடிச்சிருந்தா பல் தடத்துக்கிடையில் ஒரு அங்குலம் இடைவெளி இருக்கும். விரியன் கடிச்சிருந்தா ஒன்னு இல்ல ரெண்டு மூணு பல்தடம் இருக்கும். வரிசையா கடிச்சி வச்சிருந்தா விஷப்பாம்பா இருக்காது. அப்படியே விசப்பாம்பு கடிச்சிருந்தாலும் தோலை மட்டுமே கடிச்சிருக்க வாய்ப்புண்டு. என்ன இருந்தாலும் ஹாஸ்பிட்டல் கொண்டு போய் பார்த்துடுறது நல்லது. ஹாஸ்பிட்டல் தூரமா இருந்தா வாழைச்சாறை குடிக்க கொடுக்குறதும். கொம்பு மஞ்சளை தீயில் காட்டி சூட்டோடு சூடாய் கடிவாய்ல வைக்குறதும் விசம் பரவும் வேகத்தை கொஞ்சம் குறைக்கும். கடிப்பட்டவருக்கு வேப்பிலை சாப்பிட கொடுத்து அவருக்கு கசப்பு சுவை தெரிஞ்சா விசம் பரவலைன்னு முடிவு பண்ணிக்கலாம். தும்பை பூவும் இலையும் சேர்த்து இடிச்சு சாறெடுத்து குடிக்க கொடுக்கலாம். நல்ல பாம்பு கடிச்சா ரத்தம் சட்டுன்னு உறைஞ்சு, கண் இமை சுருங்கும், பேச்சு குழறும், கட்டுவிரியன் கடிச்சா கடிப்பட்ட இடத்தோடு வயிறும் சேர்ந்து வலிக்கும். கண்ணாடிவிரியன் கடிச்சா கடுமையான வலியும், வீக்கமும், மூச்சுத்திணறலும், வாந்தி சோர்வும், சிறுநீர், மலத்தோடு ரத்தம் வெளியேறும்.