FTC Forum

Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: MysteRy on July 24, 2025, 08:25:44 AM

Title: இஞ்சியின் இணையற்ற நன்மைகள்
Post by: MysteRy on July 24, 2025, 08:25:44 AM
(https://i.ibb.co/xq0VBtDw/518360733-1211011911060034-4869908456756978-n.jpg) (https://imgbb.com/)

உணவை எளிதில் ஷீரணிக்கச் செய்வதோடு பித்தம் சம்பந்தப்பட்ட நோய்கள் வராமல் தடுப்பது இதன் பிரதான சிறப்பு.
இஞ்சியின் இணையற்ற நன்மைகள்
நமது சமையலில் முக்கிய இடம்பிடிக்கக் கூடியது இஞ்சி. உணவை எளிதில் ஷீரணிக்கச் செய்வதோடு பித்தம் சம்பந்தப்பட்ட நோய்கள் வராமல் தடுப்பது இதன் பிரதான சிறப்பு.
இவை மட்டுமல்ல, மேலும் பல நன்மைகளையும் இஞ்சி அளிக்கிறது.
இஞ்சியில் உள்ள சில மருத்துவத் தன்மைகள், ரத்தக் குழாய்களில் ஏற்படும் ரத்த உறைவு காரணமாக வரும் மாரடைப்பைத் தடுப்பதாக தெரியவந் திருக்கிறது.
இஞ்சி, வெள்ளை வெங்காயம் இரண்டையும் ஓர் அவுன்ஸ் எடுத்து தேனில் கலந்து சாப்பிட்டால் ஓயாத வாந்தி, குமட்டல், பித்த மயக்கம் நீங்கும்.
இதில் வெள்ளை வெங்காயத்தை நீக்கிவிட்டு அதற்குப் பதிலாக மாதுளை ஜுஸ் சேர்த்து சாப்பிட்டு வந்தால் இருமல், மூச்சிரைப்பு சரியாகும்.
இஞ்சியை நாம் டீ, சூப் உடன், அல்லது மாத்திரை வடிவில் 250 மில்லி கிராம் வீதம் ஒருநாளைக்கு 4 முறை எடுத்துக்கொண்டால் ஓயாத வாந்தி, குமட்டல், பித்த மயக்கம் நீங்கும்.
மார்பகப் புற்றுநோய், புராஸ்டேட் புற்றுநோய் மற்றும் பெருங்குடல் புற்றுநோய் போன்றவற்றின் செல்களை ஒடுக்கும் தன்மை இஞ்சிக்கு இருப்பது நிரூபிக்கப் பட்டுள்ளது.
இஞ்சி இன்னும் பல நன்மைகளையும் வழங்குகிறது. எனவே நம் உணவில் இஞ்சிக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை கொஞ்சமும் குறைத்துவிட வேண்டாம்.