FTC Forum

Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: kanmani on April 19, 2012, 01:24:28 PM

Title: மாடிப்படி ஏறுங்க! இதயநோய் வராது!
Post by: kanmani on April 19, 2012, 01:24:28 PM
மாடிப்படி ஏறுங்க! இதயநோய் வராது!

அபார்ட்மென்ட் வீடுகளிலோ, பணிபுரியும் அலுவலகங்களிலோ இப்பொழுதெல்லாம் யாருமே மாடிப்படியை உபயோகிப்பதில்லை. இதற்கு காரணம் அனைத்து இடங்களிலும் லிப்ட் வசதி உள்ளதால் ஒரு மாடி ஏறவே சோம்பேறித்தனப்பட்டுக்கொண்டு லிப்ட் உபயோகிக்கின்றனர் பலரும். இதனால் உடல் பருமன் உள்ளிட்ட நோய்கள் ஏற்படுகின்றன.

மாடி ஏற படிகளை உபயோகித்தால் உடல்பருமன், இதயநோய் உள்ளிட்டவை ஏற்பட வாய்ப்பில்லை என்கின்றனர் நிபுணர்கள்.

ஜிம்மிற்கு சென்று பணம் செலவழித்து உடற்பயிற்சி செய்வதைக்காட்டிலும் மாடிப்படி ஏறுவது சிறந்த உடற்பயிற்சி என்கின்றனர் நிபுணர்கள். மாடிப்படி ஏறும்போது உடலின் அனைத்து பகுதிகளும் இயங்குகின்றன. இதன் காரணமாக உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்புகள் கரைந்து காணமல் போகின்றன.

கல்வி நிலையங்கள், அலுவலகங்கள், ஷாப்பிங் மால் போன்ற இடங்களில் எக்ஸலேட்டர், லிப்ட் போன்றவைகளை உபயோகப்படுத்துவதை விட மாடிப்படிகளை பயன்படுத்தலாம் என்கின்றனர் நிபுணர்கள்.

இதயத்திற்கு பலம்

மாடிப்படி ஏறுவதனால் இதயநோய்கள் ஏற்படாது என்கின்றனர் மருத்துவர்கள். இதய தசைகள் பலமடைகின்றன. இதனால் உடலுக்குத் தேவையான ஆக்ஸிஜன் அனைத்து பகுதிகளுக்கும் எடுத்துச்செல்லப்படுகிறது.

வாரத்திற்கு மூன்று முறை அதாவது 30 நிமிடங்கள் மாடிப்படி ஏறி இறங்கினாலே போதும். இதயநோய்கள் எதுவும் ஏற்படவாய்ப்பில்லை. உயர் ரத்தஅழுத்தம் ஏற்படுவதும் தடுக்கப்படுகின்றது.

உடல் எடை குறையும்

மாடிப்படி ஏறி இறங்கினால் எக்கச்சக்க கலோரிகள் எரிக்கப்படுகின்றன.உடல் பருமன் ஏற்படுவதில்லை. மாறாக குண்டு உடல்காரர்கள் மாடிப்படி ஏறி, இறங்கினால் உடல் சிக் என்று ஆகிவிடும்.

பிஸியானவர்களுக்கு ஏற்றது

வேலைப்பளுவினால் ஜிம், உடற்பயிற்சி என தனியாக நேரத்தை செலவழிக்க இயலாதவர்கள் மாடிப்படி ஏறி இறங்குவதன் மூலம் சிறந்த உடற்பயிற்சி கிடைக்கிறது. இதனால் உடல் பிட்டாவதோடு, கான்சன்ட்ரேசன் பவர் அதிகரிக்கிறது. இது பிற உடற்பயிற்சிகளை விட ஆபத்தில்லாத உடற்பயிற்சியாகவும் செயல்படுகிறது.

அதேசமயம், மூட்டுவலி உடையவர்கள், பின்னங்கழுத்து வலி உள்ளவர்கள் மாடிப்படி ஏறுவதை தவிர்க்கலாம் என்கின்றனர் நிபுணர்கள்.