FTC Forum

Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: MysteRy on July 17, 2025, 08:38:20 AM

Title: ஜூஸ் குடிக்கிறிங்களே... இதை எல்லாம் கவனித்தது உண்டா?
Post by: MysteRy on July 17, 2025, 08:38:20 AM
(https://i.ibb.co/6JYkzNZ3/518404871-1206240988203793-6241710678517798180-n.jpg) (https://ibb.co/Qj94LXc2)

பொதுவாக பழங்களை சாப்பிடுவதை விட, அதை ஜூஸ் செய்து குடிப்பது தான் பலருக்கு பிடிக்கும். நார்ச் சத்து அதிகம் உள்ள பழங்களை ஜூஸ் செய்து சாப்பிடுவதை விட, அப்படியே சுத்தம் செய்து பழமாக சாப்பிட்டால் அதில் உள்ள சத்துக்கள் அனைத்தும் அப்படியே கிடைத்துவிடும்.

விளையாட்டு வீரர்கள் அனைவரும் பழங்களை நேரடியாக சாப்பிடுவதை விட, ஜூஸ் செய்து குடித்து வந்தால் நல்லது. அப்படி ஜூஸ் செய்து குடிப்பதன் மூலம் விளையாட்டு வீரர்களின் நீரிழப்பை சமன் செய்து விடும்.

அப்படி பழச்சாறுகளை ஜூஸ் செய்து குடிப்பதற்கு முன்னர் நாம் கவனிக்க வேண்டியவை பல உள்ளன. அவை என்ன என்பதை பார்ப்போம்.

பெரும்பாலானோர் வீடுகளில் பழச்சாறுகள் செய்து குடிப்பதை விட கடைகளிலே வாங்கி குடிப்பர். கடைகளில் பழச்சாறுகள் குடிப்பது தொற்று நோய்களுக்கு வழிவகுக்கும். அவர்கள் ஜார்களை சரியாக கழுவாமல் அப்படியே நாள் முழுவதும் உபயோகிப்பார்கள். இதனால் பாட்டீரியாக்கள் எளிதில் உற்பத்தியாகிவிடும். அதை நாம் குடிக்கும் போது வயிற்றுப்பிரச்சனைகளை உருவாக்கிவிடும்.

பொதுவாக ஜூஸ் குடிக்கும் போது சிலர் அதில் சர்க்கரை போட்டு குடிப்பதையே வழக்கமாக வைத்துள்ளனர். ஆனால் அது நல்லதல்ல. இது உடல் எடையை கணிசமாக கூட்டிவிடும். ஏனென்றால் பழங்களிலேயே தேவையான அளவு சுக்ரோஸ் இருக்கிறது. இதில் கூடுதலாக நாம் சர்க்கரையை சேர்க்கும்போது அதன் முழு நன்மைகளும் கிடைக்காமல், கலோரியை அதிகரித்து விடும். ஆகவே சர்க்கரையை கட்டாயம் தவிர்க்க வேண்டும்.

தற்போது உள்ள கணினி காலத்தில் வேலைக்கு செல்வோர் ஜூஸ் அளவுக்கு அதிகமாக போட்டு குடித்து விட்டு மீதியை குளிர்சாதனப் பெட்டி(பிரிட்ஜ்) வைத்து விட்டு, மீண்டு வந்து குடிப்பார்கள். இது பெரிதும் பலன் அளிக்காது. காரணம் அப்போது தயாரித்து அப்போதே குடித்துவிட வேண்டும். இதனால் முழு சத்துக்களும் கிடைக்கும். பிர்ட்ஜில் வைப்பதால் சில நுண் சத்துக்கல் அழிந்துவிடுகின்றன. ஆகவெ எந்த பழச் சாறையும் ப்ரஷாக குடித்து விடுங்கள்.

எல்லா வித பழங்களிலும் பால் கலந்து மில்க் ஷேக் குடிக்கிறார்கள். இது தவறு. பாலில் எலுமிச்சை கலந்தால் என்னாகும்.திரிந்துவிடும்தானே? அப்படிதான் சிலவகை பழங்கள். மிகவும் இனிப்பான பழுத்த பழங்களுடன் பால் கலந்து ஜூஸ் தயாரிக்கலாம். மாம்பழம், ஆப்பிள் போன்றவற்றில் குடிக்கலாம். ஆனால் திராட்சை, ஆரஞ்சு, மாதுளை போன்றவற்றில் குடிக்கக் கூடாது. ஸ்ட்ரா பெர்ரி போன்ற பெர்ரி பழங்கள் இனிப்பாக இருந்தாலும் அவற்றில் புளிப்பு சுவையும் உள்ளது. ஆகவே ஸ்ட்ரா பெர்ரி, அன்னாசி ஆகியவை பாலுடன் கலந்து குடிக்கக் கூடாது.

காய்கறி ஜூஸ் குடிக்கும்போது எல்லா காய்களையும் அப்படியே பச்சையாக ஜூஸ் தயாரிக்கக் கூடாது. சில காய்களை வேக வைத்த பின்னே ஜூஸ் தயாரிக்க வேண்டும். புருக்கோலி, காலிஃப்ளவர் ஆகியவை வேக வைத்த பின்னே ஜூஸ் தயாரிக்கலாம். தக்காளி, கேரட், வெள்ளரி ஆகியவற்றை அப்படியே தயாரிக்கலாம்.