FTC Forum

Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: MysteRy on July 17, 2025, 08:29:02 AM

Title: தினமும் காலையில் ஒரு துண்டு ....
Post by: MysteRy on July 17, 2025, 08:29:02 AM
(https://i.ibb.co/wjchbrs/518332553-1206302508197641-9176172973147938233-n.jpg) (https://imgbb.com/)

இஞ்சியை பச்சையாக சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்:-

நீரிழிவு:
சர்க்கரை நோயாளிகள் காலையில் எழுந்ததும் ஒரு சிறிய துண்டு இஞ்சி அல்லது இஞ்சி சாற்றினை பருகினால், இரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டுடனும், சீராகவும் வைத்துக் கொள்ளலாம்.

இரத்த ஓட்டம்:
உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிப்பதில் இஞ்சி மிகவும் சிறந்த உணவுப் பொருள். காலையில் இஞ்சியை சிறிது உட்கொண்டால், உங்கள் உடலில் இரத்த ஓட்டம் சீராக இருக்கும்.

பசியின்மை:
உங்களுக்கு சில நாட்களாக சரியாக பசி எடுப்பதில்லையா? அப்படியெனில் காலையில் சிறிது இஞ்சியை வாயில் போட்டு மெல்லுங்கள். இதனால் உங்களுக்கு பசியுணர்வு அதிகரிக்கும்.

தலைவலி:
நீங்கள் ஒற்றைத் தலைவலியால் கஷ்டப்படுபவராயின், சிறிது இஞ்சியை அரைத்து பேஸ்ட் செய்து, நீரில் கலந்து நெற்றியில் தடவினால், ஒற்றைத் தலைவலி நீங்கும்.

சளி:
சளி இருமலுக்கு இஞ்சி நல்ல நிவாரணம் வழங்கும். அதற்கு நீரில் சிறிது இஞ்சியை தட்டிப் போட்டு கொதிக்க வைத்து இறக்கி, எலுமிச்சை சாறு மற்றும் தேன் சேர்த்து கலந்து குடிக்க, நெஞ்சுப் பகுதியில் தேங்கியுள்ள சளி முறிந்து, விரைவில் நிவாரணம் கிடைக்கும்.

பல் வலி:
பல் வலி இருக்கும் போது, இஞ்சி துண்டை ஈறுகளில் மசாஜ் செய்தால், நிவாரணம் கிடைக்கும். இல்லாவிட்டால், நீரில் இஞ்சியை தட்டிப் போட்டு கொதிக்க வைத்து, அந்நீரால் வாயைக் கொப்பளிக்க வேண்டும்.

குமட்டல்:
இஞ்சி குமட்டல் மற்றும் வாந்தி வருவதைத் தடுக்கும். அதுமட்டுமின்றி, காலையில் ஏற்படும் சோர்வையும் இஞ்சி தடுக்கும்.

செரிமானம்:
இஞ்சியைத் தட்டி நீரில் போட்டு கொதிக்க வைத்து இறக்கி, தேன் கலந்து பருக செரிமான பிரச்சனைகள் அகலும். அதிலும் காலையில் பருகினால், உங்கள் செரிமான மண்டலம் சுத்தமாகி, அதன் செயல்பாடு அதிகரிக்கும்
மருத்துவரை கலந்தாலோசித்து உட்கொள்ள‍வும்.