FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Asthika on July 15, 2025, 02:57:08 PM
-
எந்த வாசல் வழி காதல் நடந்து வரும்
என்று காத்து கிடந்தேன்
அது வானில் பறந்து வந்து கூரை திறந்து வரும் என்று இன்று தெளிந்தேன்
-
ஒரு கோபமும் இல்லை
உன்னை நீங்கினால்
நான் என்னாவேன் என்று நன்கறிந்தும்
உன்னால் செல்ல முடிந்தது அல்லவா!
அதன் சூட்சமத்தைதான்
என்னவென்று அறியாமல் தத்தளிக்கிறேன்
-
மரணம் வரைக்கும்
தொடரும் துயரத்தையும்
மரணத்தையே கொடுக்கும்
துயரத்தையும்
உன்னால் மட்டுமே எனக்கு மாறி மாறி
தர முடிகிறது