FTC Forum

Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: MysteRy on July 15, 2025, 08:29:59 AM

Title: உங்கள் வீட்டில் தயாரிக்கலாம் கற்றாழை சோப்
Post by: MysteRy on July 15, 2025, 08:29:59 AM
(https://i.ibb.co/8gcJjqKm/517446405-1202965295198029-4317370022051254689-n.jpg) (https://ibb.co/VYmdvRjL)

கற்றாழை என்பது இயற்கையாகவே மருத்துவ குணம் நிறைந்த மூலிகையாகவும், அழகுசாதனப் பொருட்களிலும் பயன்படுகிறது.

கற்றாழையானது, நமது உடம்பின் பல்வேறு விதமான சருமப் பிரச்சனைகளுக்கு மருந்தாகப் பயன்படுவதால், இதனைக் கொண்டு இயற்கையான முறையில் சோப்புகள் தயாரிக்கப்படுகிறது.

இயற்கையாக தயாரிக்கப்படும் இந்த கற்றாழை சோப்பானது, நமது சருமத்திற்கு நல்ல ஈரப்பதத்தை கொடுத்து, சருமம் வறண்டு போகாமல் மென்மையாக பாதுகாக்கிறது.

கற்றாழை சோப் செய்வது எப்படி?

ஒரு பாத்திரத்தில் தண்ணீர் விட்டு கொத்திக்க வைத்து, அதில் சில தேக்கரண்டி காஸ்டிக் சோடாவை சேர்த்து, பின் அதை ஒரு மர கரண்டி கொண்டு கடினமாக மற்றும் கெட்டியாக மாறாமல் நன்றாக கலக்க வேண்டும்.

கற்றாழையின் ஜெல்லை தனியாக எடுத்து, அதனுடன் பாதாம் எண்ணெய், தேங்காய் எண்ணெய், மற்றும் விளக்கெண்ணெய் ஆகியவற்றை சேர்க்க வேண்டும்.

இதில் சேர்க்கப்படும் இந்த எண்ணெய்கள் சோப்பிற்கு ஈரப்பத்தத்தைக் கொடுத்து, சருமத்தை வறண்டு போகாமல் பாதுகாக்கச் செய்கிறது.

எண்ணெய்கள் கலந்த இந்த சோப்புக் கூழை சோப்பு அச்சில் வார்க்கும் முன் கெட்டியாக்கி விடாமல், நன்றாக கிளறிக் கொண்டே இருக்க வேண்டும்.

பின் இந்தக் கலவையில் வாசனைக்காக தாழம்பூ நறுமணம் ஆயிலை நான்கு துளிகள் சேர்த்து, நன்கு கிளறியபிறகு இந்த கலவையை அச்சுக்களில் வார்த்து ஐந்து மணி நேரம் கழித்து பிரிட்ஜில் டீப் பிரீஸ் பகுதியில் வைக்க வேண்டும்.

பின் இதனை இரவு முழுவதும் அப்படியே வைத்து விட்டு காலையில் எடுக்க வேண்டும். இப்போது நீங்கள் செய்த இயற்கையான கற்றாழை சோப் தயாராகி இருக்கும்