FTC Forum

Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: MysteRy on July 14, 2025, 08:09:06 AM

Title: புடலங்காயை ஒரு மூலிகை என்பதை அறியாமலே பயன்படுத்தி வருகிறோம்.
Post by: MysteRy on July 14, 2025, 08:09:06 AM
(https://i.ibb.co/G447whpp/517427597-1202107905283768-548300492031214215-n.jpg) (https://ibb.co/LXXSwGRR)

இதில் உள்ள விதைகளை நீக்கி சதைப்பகுதியை மட்டும் பயன்படுத்தவேண்டும். புடலங்காயை பச்சை பயிறு சேர்த்து கூட்டாக செய்து தொடா்ந்து 12 நாட்கள் சாப்பிட்டு இடைவெளி விட்டு ஒரு மண்டலம் வரை சாப்பிட்டுவர மூல நோயின் தாக்கம் குறைந்து மூலம் கருகி விழுந்துவிடும்.

எடையை கட்டுப்பாட்டில் வைத்திருக்க விரும்புபவர்கள் புடலங்காயை அடிக்கடி உணவில் சேர்த்து வரவேண்டும். இதனால் உடலில் உள்ள தேவையற்ற உப்பு நீரை வியர்வை சிறுநீர் மூலம் வெளியேற்றும்.

அதிக உடல் சூட்டால் மஞ்சள்காமாலை நோய் ஏற்பட்டால் அவர்கள் புடலங்கொடியின் இலைகளை கைப்பிடி அளவு எடுத்து அதனுடன் அதே அளவு கொத்தமல்லி சேர்த்து 300மிலி தண்ணீரில் கொதிக்கவைத்து அந்த தண்ணீரை வடிகட்டி மூன்று வேளை குடித்து வந்தால் மஞ்சள்காமாலை கட்டுப்படும்.

இதய கோளாறு உள்ளவர்கள் புடலை இலையின் சாறு எடுத்து நாள்தோறும் 2 தேக்கரண்டிவீதம் வெறும் வயிற்றில் 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால் இதயநோய்கள் அனைத்தும் நீங்கும்.

புடலையின் வேரை கைப்பிடி எடுத்து மைய அரைத்து சில துளிஅளவு வெந்நீரில் விட்டு குடித்து வந்தால் மலமிளகி வயிற்றில் உள்ள பூச்சிகள் வெளியேறும்.

புடலங்காயை பொறியல் செய்து சாப்பிட நரம்புகளுக்கு புத்துணர்வு கிடைக்கும். நினைவாற்றல் அதிகரிக்கும். நீரிழிவு உள்ளவர்கள் புடலங்காயை எந்த வகையிலாவது சேர்த்துவர அனைத்து வகையான சத்துக்களும் அவர்களுக்கு கிடைக்கும்.

கடும் காய்ச்சல் உள்ளவர்கள் வெட்டிய புடலங்காய் 250கிராம் எடுத்து 300மிலி தண்ணீரில் கொதிக்க வைத்து வடிகட்டி 200மிலி குடித்தால் ஒரே நாளில் காய்ச்சல் இயற்கையாக நீங்கும்...