FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Yazhini on July 12, 2025, 02:58:59 PM
-
(https://i.postimg.cc/c4nkHz9n/8946c6b8b61c1ef0708a32a53c56fddf.jpg) (https://postimages.org/)
குறும்புதனத்தின் குத்தகை நீ
குழந்தைத்தனத்தின் சொந்தக்காரி நீ.
சிற்றெறும்பாய் ஊர்ந்து உயிரில் கலந்தாய்
சிறிய அணுவாய் உறவில் இணைந்தாய்.
ஆனந்தம் பெருகுமடி உன் பேச்சில்
ஆருயிரும் இனிக்குதடி உன் அசைவில்.
ஆயிரம் துன்பங்கள் வந்தபோதும்
உன் சிரிப்பின் அழகில்
வாழ்வின் அர்த்தமும் கிடைக்குதடி.
காயத்தினால் கல்லாகிய மனமும்
உன் கண்ணொளியில் இலகுதடி...
வறண்ட நிலத்தின் அமுத மழையே
என் மழலையே...
என் காரிருளின் சிறு ஒளியே
என் உயிரின் உயிரே...
நீடுழி நீ வாழ
துடிக்கும் என் இதயமடி ❤️
-
அற்புதமான கவிதை யாழினி ! 🤩
மழலையின் அன்பும் சிரிப்பும் இதயத்தைத் தொடும் விதமாக வரிகளில் வெளிப்படுகிறது
யாழினி NK வாழ்த்துகள் 🥳
-
யாழினி நீடுழி நீ வாழ்
நிறைய பதிவுகள் இட
துடிக்கும் என் இதயம்
வாழ்த்துக்கள்