FTC Forum

Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: MysteRy on July 08, 2025, 08:32:45 AM

Title: எளிய பாட்டி வைத்தியம் :-
Post by: MysteRy on July 08, 2025, 08:32:45 AM
(https://i.ibb.co/B5k7XH0m/515282868-1197149599112932-8427775473413694504-n.jpg) (https://imgbb.com/)

1) வெந்தயத்தை தேங்காய்ப்பாலில் ஊறவைத்து அரைத்து தலைக்குத் தேய்த்துக் குளித்து வந்தால் தலைமுடி உதிர்தல் குறையும்.

2) முருங்கைப் பூவை பருப்புடன் சமைத்து உண்டால் கண் எரிச்சல்,வாய் நீர் ஊறல், வாய்க் கசப்பு நீங்கும்.

3) சிறிதளவு துளசி இலையை எடுத்து அதை இடித்து சாறு எடுத்து தினமும் 3 வேளை குடித்து வந்தால் இருமல் குணமாகும்.

4) சிறிது பெருங்காயத்தை எடுத்து வெந்நீரில் கரைத்து அந்த தண்ணீரை குடித்து வர இருமல் நிற்கும்.

5) தென்னைமரக் குருத்தோலையை நெருப்பில் விட்டு தூள் செய்து பின்பு தேங்காய் எண்ணையில் குழப்பி செருப்பு கடிபட்ட இடத்தில் தடவி வர காயம் குணமாகும்.

6) காய்ந்த திராட்சை பழத்தை பசும்பாலில் ஊற வைத்து பிழிந்து அந்த சாறை வாடிகட்டி குழந்தைகளுக்கு கொடுத்து வர மலச்சிக்கல் தீரும்.

7) ஆடாதொடா இலை, துளசி, வெற்றிலை, தூதுவளை, அரைத்து பின் வேகவைத்து தேன் கலந்து சாப்பிட்டு வர சளித்தொல்லை குணமாகும்.

😎 திப்பிலி, கடுகு, சீரகம், சுக்கு, மிளகு, வேப்பங்கொழுந்து, சேர்த்து அரைத்து நிழலில் காய வைத்து சாப்பிட ஜலதோஷம் குணமாகும்.

9) காய்ந்த மஞ்சளை பொடி செய்து தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணையில் காய்ச்சி தலைக்கு தேய்த்து வர கண் எரிச்சல் குணமாகும்.

10) சதகுப்பை விதையை கொதிக்க வைத்து சர்க்கரை சேர்த்து வடிகட்டி குழந்தைகளுக்கு கொடுக்க ஜீரண சக்தி அதிகரிக்கும்.