FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: joker on July 07, 2025, 05:35:31 PM
-
உலகம் அழகாய்
அமைந்திருக்கும் போது
பெண்ணாய் பிறந்ததால் மட்டுமே
ஒருவரின் சிரிப்பு
துன்பமாய் இருக்க
படைக்கபட்டதோ
கள்ளிப்பால் தாண்டி இன்று
உலகை காண எத்தனை
துயரம் அவள் கடக்கிறாள்
அடுப்பங்கரை போதுமே
பள்ளி படிப்பு எதற்கு ?
என்பவர்களுக்கு
இன்று அதையும் தாண்டினாள்
விண்வெளி வரை சென்று
சாதித்தாள்
பெண் என்பவள் அழகானவள்
அவளுக்கும் ஆசைகள் ,
வண்ண வண்ண கனவுகள் பல
பட்டாம்பூச்சி போல பறந்து கொண்டிருக்கும்
அவள் மனதில் ஆயிரம் துன்பங்கள்
இருந்தாலும் சகித்து கொள்வாள்
தன் குடும்பத்தை எண்ணி
பணம் இருக்கிறது , அழகான பெண்
அன்பாய் வளர்த்து ஓர் அரக்கனுடன்
வாழ சொல்லி ,
அவள் பட்ட துன்பத்தை எல்லாம்
அவ்வப்போது சொல்லிய பிறகும்
பொறுத்துக்கொண்டு வாழ சொல்லும் பெற்றோர்
என்னை பொறுத்தவரை
வரதட்சணை வாங்கும் எல்லாரும்
அரக்கர்களே,
பாரதி சொன்னது போல
நெஞ்சு பொறுக்குதில்லையே -இந்த
நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால்
பெண் என்றும் தனக்காய் வாழ்வதில்லை
கண்ணகி தனக்காக மதுரையை எரிக்கவில்லை
சீதை தனக்காய் அக்னியில் இறங்கவில்லை
ஜான்சிராணி தனக்காக போரிடவில்லை
நம் தாய்மார்கள் என்றும் தன்னலத்திற்காய்
வாழ்வதில்லை
பெற்றோர்களே
விசித்திரமாய் இருக்கிறது
உங்கள் பணத்தை வாங்கி
உங்கள் பிள்ளையை
கல்யாணம் செய்துகொள்பவன்
எப்படி நல்லவன் என்றும்
உங்கள் பிள்ளையை பார்த்துக்கொள்வான்
என்று நம்புகிறீர்கள் ?
கற்றுக்கொடுங்கள்
உங்கள் ஆண் பிள்ளைகளுக்கு
பெண் ,ஆண்
எதிர்சொல்
அல்ல
இணைச்சொல் என்று
கற்றுக்கொடுங்கள்
உங்கள் பெண் பிள்ளைகளுக்கு
இவ்வுலகம் ஆண்களை சார்ந்ததல்ல
உலகில் வாழ
ஆயிரம் வழிகள் உண்டு என
மரணம்
நம்மை தேடி வர வேண்டும்
அதை தேடி
நமது பயணம் இருக்க கூடாது
என்றும்
****JOKER***
-
ஒவ்வொரு வரியிலும் ஒரு ஆழமான அர்த்தம்…அருமையான கவிதை joker 💐
-
வரதட்சணை பேரழுத்தமும், பாலியல் சீண்டல்களும் இன்று ஒரு பெண்ணின் வாழ்க்கையை மரணமாக மாற்றியிருக்கிறது மச்சி
"மரணம்
நம்மை தேடி வர வேண்டும்
அதை தேடி
நமது பயணம் இருக்க கூடாது
என்றும்" 👍 மிகவும் உண்மையான வரிகள் மச்சி
அருமையான பதிவு ஜோக்கர் மச்சி ! 🍀