FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: சாக்ரடீஸ் on July 07, 2025, 03:01:26 PM

Title: HBD மை டியர் தல !
Post by: சாக்ரடீஸ் on July 07, 2025, 03:01:26 PM
(https://i.ibb.co/35pYPDdH/0505a2c07caff4ea7e7565347973dc06.jpg) (https://ibb.co/wZSr29g1)


HBD மை டியர் தல !

வெற்றி மட்டும் அல்ல
வெறுப்பும் வந்தது
அவன் பக்கம்
ஆனால்
புறக்கணிக்க யாராலும்
முடியவில்லை அவன் இருப்பை

எதிரிகளுக்கும் அவன் மேல்
இருக்கும் மரியாதை

அழுத்தமான நேரம் வந்தாலும்
அவன் முகத்தில் அச்சமில்லை
அமைதியே அவன் ஆயுதம்
நம்பிக்கையே அவன் நெருப்பு

தோல்வியிலும்
தூணாக நின்றவன்
எதிர்ப்பிலும்
தலை நிமிர்ந்து நடந்தவன்
சிறந்தவன் அல்ல அவன்
சிறப்பு தனக்கே
உரியதாய் இருந்தவன்

மக்கள் மனதில் தோனி
அது வெறும்
ஒரு பெயர் இல்லை
அதையும் தாண்டி
ஒரு உணர்வு

மை டியர் தல
உன் பிறந்த நாளில்
வாழ்த்து சொல்வதில்
எனக்கு பெருமை
ஏனெனில்
உன் வாழ்க்கையே
எனக்கு ஒரு பாடம்
Title: Re: HBD மை டியர் தல !
Post by: joker on July 07, 2025, 05:47:19 PM
மச்சி

ஒரு காலத்தில சச்சின் அவுட் ஆனா
டிவி பொட்டியை ஆப் பண்ணிட்டு போற காலம் இருந்திச்சி

அதை தல தோனி கலத்தில இருக்காரா அப்போ வெற்றி கிட்டும்
என நம்ப வெச்சவர் சாதிச்சும் காட்டியவர்

தன்னபிக்கையில்
தல எப்பவும் தல தான்

super machi