FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Lakshya on July 07, 2025, 09:39:22 AM

Title: எனக்காகவே ✨
Post by: Lakshya on July 07, 2025, 09:39:22 AM
சந்தோஷம் இல்லாத இடத்திலும் வாழ்க்கையை வடிவமைக்க தெரிந்தவள் நீ...
கனவுகள் பல கொண்டவள் நீ , கனவாகவே அது பறந்து போவதையும் கண்டவள் நீ...

வலி அடங்கும் வார்த்தைகளிலும் சிரிப்பை கலந்து பேச தெரிந்தவள் நீ...
வழி தெரியாத பாதையில் தான் உன் பயணம் தொடர்கிறது...

விழி மூடாமல் கண்ட கனவுகள் என்ன ஆகுமோ?
விழிகள் சொல்வதை கேட்க யாருமில்லை...
வாக்குறுதிகள் உயிரற்ற வார்த்தைகள் தானா ??
Title: Re: எனக்காகவே ✨
Post by: Vethanisha on July 07, 2025, 12:15:32 PM

வலி அடங்கும் வார்த்தைகளிலும் சிரிப்பை கலந்து பேச தெரிந்தவள் நீ...


பெண்மையின் பலமும் பலவீனமும் இதுவே
அருமையான வரி Laksuu ❤️
Title: Re: எனக்காகவே ✨
Post by: joker on July 07, 2025, 06:11:45 PM
எல்லாம் அறிந்தவள் நீ
உன் எண்ணங்களை அறிந்தவர்  இலர்



தொடர்ந்து எழுதுங்கள்