FTC Forum

Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: kanmani on April 18, 2012, 01:40:22 PM

Title: கோடையில் பாதங்களை கவனிங்க
Post by: kanmani on April 18, 2012, 01:40:22 PM
கோடையில் பாதங்களை கவனிங்க

கோடைகாலத்தில் வியர்வை ஆறாக பெருகுவதால் உடலில் துர்நாற்றம் வீசும். அதேபோல் பாதங்களில் எழும் விரும்பத்தகாத வாசனையினால் பொது இடத்தில் இயல்பாக இருக்க முடியாது. கோடையில் வியர்வை நாற்றத்தைப் போக்க நாம் ம‌ட்டு‌ம் தூ‌ய்மையாக இரு‌ந்தா‌ல் போதாது, ‌நாம் உபயோகிக்கும் ஷூ, செரு‌ப்பு, போ‌ன்றவ‌ற்றையு‌ம் தூ‌ய்மையாக வை‌த்‌திரு‌க்க வேண்டும். அப்பொழுதுதான் நம் பாதங்களை ஆரோக்கியமாகவும், அழகாகவும் பராமரிக்க முடியும் என்கின்றனர் அழகியல் நிபுணர்கள்.

பாதங்களை கழுவுங்கள்

அடிக்கடி குளிர்ந்த நீரால் பாதங்களை கழுவுங்கள். இதனால் துர்நாற்றம் வீசுவது தடுக்கப்படும். பழைய ஷூ, சாக்ஸ் போன்றவைகளை மாற்றுங்கள். சில செரு‌ப்புக‌ள் ‌நீ‌ரி‌ல் ப‌ட்டது‌ம், ‌நீரை உ‌ள்‌ளிழு‌த்து‌க் கொ‌‌ள்ளு‌ம் த‌ன்மை இரு‌க்கு‌ம். அ‌ந்த ‌நீ‌ரி‌ல் செரு‌ப்பு ஊ‌றி அதனா‌ல் து‌ர்நா‌ற்ற‌ம் ஏ‌ற்படு‌ம். அ‌ப்படி‌ப்ப‌ட்ட செரு‌ப்புகளை ‌நீ‌ர் ப‌ட்டது‌ம் உடனடியாக வெ‌யி‌லி‌ல் காய வை‌க்கவு‌ம்.

உலர்வாக வையுங்கள்

‌விய‌ர்வை ம‌ட்டும‌ல்லாம‌ல் ‌நீ‌ங்க‌ள் அ‌ணியு‌ம் ‌சில பொரு‌ட்களான ஷு, சாக்ஸ் போன்றவையும் ‌உ‌ங்க‌ள் ‌மீது துர்நாற்றம் ஏற்பட முக்கிய காரணமாக அமையலாம். வெய்யில் காலங்களில் ஷு அணிவதை தவிர்க்கலாம். அ‌வ்வாறு அ‌ணிய வே‌ண்டிய க‌ட்டாய‌ம் ஏ‌ற்ப‌ட்டா‌ல் ‌தினமு‌ம் சா‌க்ஸை துவை‌த்து‌ப் பய‌ன்படு‌த்த வே‌ண்டு‌ம். கூடுமானவரை பருத்தியா‌ல் செ‌ய்ய‌ப்ப‌ட்ட சாக்ஸ் அணிவது நல்லது. மேலும் சாக்ஸ் அணியும் முன் காலில் பவுடரை தடவவும். இது வியர்வையை தடுத்து காலை உலர்ந்த நிலையில் வைக்க உதவும்.

டேனின் டீ

கோடைகாலத்தில் நாம் என்ன சாப்பிடுகிறோம் என்பதும் முக்கியம் வாசனைப் பொருட்கள் அதிகம் கொண்ட உணவுகளை தவிர்க்க வேண்டும். அதேபோல் வெங்காயம், வெள்ளைப்பூண்டு போன்ற உணவுகளை உண்ணக்கூடாது. இதனால் வியர்வை மூலம் துர்நாற்றம் பரவுவது தடுக்கப்படும்.

டேனின்கள் கொண்ட தேநீரை தண்ணீரில் கலந்து 10 ஊறவைக்கலாம். பின்னர் பாதங்களை அரைமணிநேரத்திற்கு அந்த தண்ணீரில் ரிலாக்ஸ்சாக ஊறவைக்கவும். இது அதிகம் வியர்வை சுரப்பதை கட்டுப்படுத்தும். பாதங்களை உலர்வாக வைக்கும்.