FTC Forum

Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: kanmani on April 18, 2012, 01:37:15 PM

Title: கண்கள் களைப்படையாம பாத்துக்கோங்க
Post by: kanmani on April 18, 2012, 01:37:15 PM
கண்கள் களைப்படையாம பாத்துக்கோங்க

கோடை காலத்தில் கண்கள் அதிகம் பாதிப்பிற்குள்ளாகும். கண் எரிச்சல், கண்களின் கீழ் கருவளையம், கண்களில் சோர்வு ஏற்படும் இதனால் கண்களின் அழகே கெட்டுவிடும். கண்களின் அழகை பாதுகாக்க அழகியல் நிபுணர்கள் கூறும் ஆலோசனைகளை பின்பற்றுங்களேன்.

கண் எரிச்சல்

பருத்தி துணியில் இரண்டு மூன்று துளி ரோஸ் வாட்டர் ஊற்றி அத்துடன் விளக்கெண்ணெய் கலந்து அந்த துணியை இமைகளின் மீது பூசவும். கண்களில் எரிச்சல் இருந்தால் உடனடியாக குணமாகும். கண்களுக்கும் புத்துணர்ச்சி கிடைக்கும்.

கருவளையம் போக்க

கண்களின் அழகை கெடுப்பதில் கருவளையத்திற்கு பங்குண்டு. அதிக நேரம் கண்விழிப்பதும், கணினி, தொலைக்காட்சி பார்ப்பதினாலும் கருவளையம் ஏற்படும். அதேபோல் மங்கலான வெளிச்சத்தில் படிப்பதால் கண்களுக்கு தேவையற்ற சிரமத்தை ஏற்படுத்துகின்றது. அதன் காரணமாக கண் சிவப்பதுடன் கரு வளையமும் உண்டாகலாம்.

வெள்ளரிக்காயை வட்டமாக கட் செய்து கண்களின் மீது வைக்கவும். அதேபோல் உருளைக்கிழங்கும் கருவளையத்தைப் போக்கும்.கருவளையத்தை போக்க 2 அ‌ல்லது 3 துளி எலுமிச்சைச் சாறை ஐஸ் போன்று குளிர்ந்த பாலில் சேர்த்து பஞ்சில் நனைத்து கண்களின் மேல் 15 நிமிடம் வைத்திருப்பது.

சோர்வை விரட்டுங்க

தொலைக்காட்சி பார்க்கும் போது அதிக இடைவெளி விட்டு பார்க்கவும், அதேபோல் இரவு நன்றாக உறங்கவும்.

பணிபுரியும் இடங்களில் கணினி முன் நேராக அமர்ந்து வேலை செய்வதால் கண்கள் களைப்படையாமல் இருக்கும் அதேபோல் ஒவ்வொரு அரைமணி நேரத்திற்கு ஒருமுறையும் கண்களை வேறு பக்கம் பார்த்து ஒரு நிமிடம் ரிலாக்ஸ் செய்யவும்.

கணினி முன் அமர்ந்து கண்களை இமைக்காமல் பார்த்துக்கொண்டிருக்க வேண்டாம், அது கண்களை உலர்வடையச் செய்யும். அடிக்கடி கண்களை இமையுங்கள், அது கண்களின் ஈரப்பதத்தை தக்கவைக்கும்.

குடை அவசியம்

வெயிலில் வெளியே அலைய வேண்டிய வேலை இருந்தால் குடை எடுத்துப் போங்கள். வெயிலில் வெளியே செல்ல வேண்டியிருந்தால் ‘கூலிங் க்ளாஸ்’ அணியவும். ஏனெனில் வெயிலில் கண்களில் எற்படும் கூச்சத்தால், கண்களுக்குக் கீழே சுருக்கங்கள் ஏற்படலாம்.

கண்களுக்கு ஒத்தடம்

வெது வெதுப்பான நீரில் காட்டன் துணிகளை நனைத்து அவ்வப்போது கண்களுக்கு ஒத்தடம் கொடுங்கள். இது கண்களை ரிலாக்ஸ் ஆக்கும்.

பேக் வேண்டாம்

‘ஃபேஸ்பேக்’ மற்றும் ‘அஸ்டிரின்ஜென்ட்’ கண்களைச் சுற்றி போடக் கூடாது. அவை காய்ந்த பின் அந்த இடத்தில் உள்ள தோலை இழுத்து சுருக்கத்தை ஏற்படுத்தும். கண்களுக்குக் கீழே உள்ள சருமம் மிகவும் மென்மையானதால் அதை இழுத்து விடுவதோ, தேய்ப்பதோ கூடாது. இப்படி முரட்டுத்தனமான காரியங்கள் செய்தால் சுருக்கங்கள் ஏற்படலாம்.

அதேபோல் மேக்கப்பை கலைக்கும் போது கண் பகுதியில் மெதுவாக ரிமூவரை பயன்படுத்துங்கள். 10 நொடிகள் கழித்து ஈரமான பஞ்சைக் கொண்டு துடைத் தெடுக்கவும். ஈரப்பஞ்சை கண்களில் மெதுவாக வைத்து கீழிருந்து மேலாக தேய்க்கவும். கண்களுக்கு பாதிப்பு ஏற்படாது.