FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Vethanisha on July 06, 2025, 09:23:07 AM

Title: நீ வருவாய் என ❤️
Post by: Vethanisha on July 06, 2025, 09:23:07 AM
கடலோர அலைகள் வந்து
 கரையோர மணல்களை
உரசிக் கொஞ்சம்  செல்ல,
 நீங்கா உன் நினைவுகள் 
 மீண்டும் என் மனத்தோடு
 அசைபோட்டு பதம் பார்க்க

எனக்காய் சுவாசித்தவளே!,
என்னை மட்டும் நேசித்தவளே!,

இருவராய் நாம் கண்ட கனவில்
 இன்று
 நான்  மட்டும் பயணிக்கிறேன்
உன் நினைவுகளை மட்டும் 
துணையாய் கொண்டு

பேசி சிரித்த தருணங்கள்
பேசாமல் எனை சூரையாடிய
உன் மௌனங்கள்
கண் ஜடையில் மயங்கிய காலங்கள்
செல்லமாய் கண்டித்த
உன் சிணுங்கல்கள்
கண் முன்னே மீண்டும் எழ
கலங்கி நிற்கிறேன் நான்

என்றாவது ஒரு நாள்
உனை சேரும் நாள் வரும்  என்று
உன் காதலில் தொலைந்த என்னை
மீட்டெடுக்க யாரும் இன்றி,

உன்னை
தொலைத்த இடத்திலேயே
இன்றும் அமர்கிறேன்

மீண்டும்
நீ வருவாய் என ❤️

Title: Re: நீ வருவாய் என ❤️
Post by: சாக்ரடீஸ் on July 06, 2025, 12:52:44 PM
வேதநிஷா மாப்பி 🥳 சூப்பர் கவிதை

காதலின் ஆழமும் நினைவுகளின் தாக்கமும் ஒவ்வொரு வரியிலும் புலப்படுகிறது. கடலோர அலைகளும் மௌனத்தின் சூரையாடலும் மனதில் ஆழமாகப் பதிகின்றன.

ஆழமான கருத்துகள் மாப்பி 🤩

Title: Re: நீ வருவாய் என ❤️
Post by: Asthika on July 06, 2025, 06:02:46 PM
வேதா 💗💗உண்மையான வரிகள் .... 🫂🫂🫂
Title: Re: நீ வருவாய் என ❤️
Post by: Lakshya on July 07, 2025, 09:48:59 AM
மிக அழகான வரிகள் meehoon...❤️
Title: Re: நீ வருவாய் என ❤️
Post by: joker on July 07, 2025, 06:09:15 PM
எதிர்பார்த்து
நாம்
ஒவ்வொரு
நொடியும்
காத்திருப்போம்
என்பதை
மறந்து

எப்படி
இருக்க முடிகிறது
அவர்களால்

சரி சரி
அங்கேயே ரொம்ப நேரம்
உட்காராமல் வீட்டுக்கு நேரத்துக்கு
வந்து சாப்பிடுங்கள்  :D :D


அருமை கவிதை