FTC Forum

Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: MysteRy on July 05, 2025, 08:12:42 AM

Title: புற்றுநோய்க்கு எதிரான பச்சைப் பட்டாணி - இயற்கை மருத்துவம்
Post by: MysteRy on July 05, 2025, 08:12:42 AM
(https://i.ibb.co/qLbTccg8/515389342-1196378485856710-2033037443681334898-n.jpg) (https://ibb.co/qLbTccg8)

பச்சைப் பட்டாணியில் உள்ள கவுமெஸ்டிரால் எனப்படும் பைட்டோநியூட்ரியன்ட்கள் புற்றுநோய்க்கு எதிராக செயல்படக்கூடியவை.

பச்சைப் பட்டாணியில் நிறைந்திருக்கும் ‘ஹைப்போநியூட்ரியன்ட்’கள், பல்வேறு நற்பலன்களைத் தருகின்றன. பச்சைப் பட்டாணியில் உள்ள கவுமெஸ்டிரால் எனப்படும் பைட்டோநியூட்ரியன்ட்கள் புற்றுநோய்க்கு எதிராக செயல்படக்கூடியவை.

பச்சைப் பட்டாணியின் மூலம், உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் குறைக்கலாம்.

உடலில் உள்ள டிரை கிளிசரைடுகளின் அளவைக் குறைத்து, இதய நோய்களைத் தடுப்பதே பச்சைப் பட்டாணியின் மிக முக்கிய பலனாகும். இதில் உள்ள நோய் எதிர்ப்பு அழற்சிப் பொருட்களும், சிறிதளவு ஆன்டிஆக்சிடன்ட்களும் இதய நோய்களில் இருந்து பாதுகாக்கும்.

அதிக நார்ச்சத்தும் புரதச்சத்தும் நிறைந்துள்ள பச்சைப் பட்டாணி, ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைக்க உதவுகிறது.

பச்சைப் பட்டாணியில் உள்ள ஆன்டிஆக்சிடன்ட்கள் நம்மை என்றும் இளமையாக வைத்திருக்க உதவுகின்றன. இதில் உள்ள பிளேவனாய்டுகள், பைட்டோ நியூட்ரியன்ட்கள், கரோட்டினாய்டுகள் மற்றும் பீனாலிக் அமிலம் போன்றவை நம்மை இளமையாகவும், துடிப்போடும் திகழச் செய்கின்றன.