FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Yazhini on July 03, 2025, 01:14:21 AM

Title: தங்கக் கூண்டு
Post by: Yazhini on July 03, 2025, 01:14:21 AM
(https://i.postimg.cc/Qx2FdRZd/IMG-20250703-012004.jpg) (https://postimages.org/)

சிறுகூட்டினுள் சிக்கிக் கொள்ளாதே...
தன்னை மறக்க வைக்கும்
எந்தவொரு கூட்டினுள்ளும் சிக்கிக் கொள்ளாதே.
பல நேரங்களில் சுதந்திரத்தைப்
பறிக்கும் கூண்டு அழகுதான்...
நம் சிறகுகள் உடையும்வரை
அதன் ஆபத்தை நாம் உணர்வதில்லை.
தங்கத்திலே இருந்தாலும் கூண்டு
பறவைக்கு சிறைச்சாலை தான்...

சிறைச்சாலைகள் பலவிதம்.
மது, புகையிலை, அலைபேசி, கணினி,
புகழ்ச்சி, சுயநலம், பொறாமை,.. இன்னும் பல.
இங்கு எதில் நாம்
அதிகம் முழ்கின்றோமோ,
அதில் ஒன்று முத்தை எடுக்கின்றோம்
அல்லது மூழ்கி மூர்ச்சையாகின்றோம்.
இதை தேர்ந்தெடுப்பதும் நாமே...
அளவுக்கு மீறினால் அமுதமும் நஞ்சு.
பயில்வோம்! தெளிவோம்! வாழ்வோம்!
Title: Re: தங்கக் கூண்டு
Post by: சாக்ரடீஸ் on July 03, 2025, 12:15:44 PM
யாழினி அருமை 🍀 NK 🥳