FTC Forum

Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: MysteRy on June 30, 2025, 07:58:48 AM

Title: 14 நாட்கள்.. 2 பேரிச்சம்பழம் மட்டுமே சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா?
Post by: MysteRy on June 30, 2025, 07:58:48 AM
பேரிச்சம் பழத்தில் விட்டமின் B6, B12, மெக்னீசியம், கால்சியம், இரும்புச்சத்து போன்றவை அதிகமாக நிறைந்துள்ளது. அத்தகைய பேரிச்சம்பழத்தை 14 நாட்கள் தொடர்ந்து, ஒவ்வொரு நாளும் சாப்பிட்டு வந்தால், உடலின் ஏற்படும் அற்புத மாற்றங்கள் இதோ!

* தினமும் இரண்டு பேரிச்சம்பழம் சாப்பிட்டு வந்தால், குடல் இயக்கத்தை சீராக்கி, செரிமானம், வாயுத்
தொல்லைகள், பெருங்குடல் சார்ந்த நோய்கள் வராமல் தடுக்க உதவுகிறது.

* பேரிச்சம்பழத்தில் இருக்கும் மெக்னீசியம், ஒரு சிறந்த அழற்சி எதிர்ப்பு பொருளாக உள்ளதால், அது சிறந்த
ஒரு வலி நிவாரணியாகவும், கை, கால் வீக்கத்தை குறைக்கவும் உதவுகிறது.

* பேரிச்சம்பழத்தில் உள்ள மெக்னீசியம் இதய நோய்கள், உயர் ரத்த அழுத்தம் மற்றும் ஸ்ட்ரோக் போன்ற
பிரச்சனைகள் ஏற்படும் அபாயத்தை குறைக்கிறது.

* பேரிச்சம்பழத்தில் இருக்கும் விட்டமின் B6 மூளையின் செயலாற்றலை அதிகரித்து, அறிவாற்றல்,
நினைவாற்றலை ஊக்குவித்து, ஞாபகசக்தி மற்றும் கவனம் செலுத்துதல் போன்ற திறனை அதிகரிக்கச்
செய்கிறது.

* கர்ப்பிணிகள் பேரிச்சம்பழம் சாப்பிடுவதால், வலி உண்டாகாமல் சுகப்பிரசவம் ஏற்படவும், பிரசவத்திற்கு பின்
உடல் எடையை குறைக்கவும் உதவுகிறது....


(https://i.ibb.co/vxPVqtkK/513079641-1190291096465449-2188364211078167116-n.jpg) (https://ibb.co/kg85BdXW)