FTC Forum

Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: MysteRy on June 27, 2025, 07:58:39 AM

Title: வயிற்றுப்புண்ணை குணமாக்கும் திராட்சை
Post by: MysteRy on June 27, 2025, 07:58:39 AM
(https://i.ibb.co/8Dv1gGJp/510667377-1188297469998145-9042455532466735290-n.jpg) (https://ibb.co/HDw5TR0s)

காலையில், திராட்சை சாறு குடித்து வந்தால், வேறெந்த மருத்துவ சிகிச்சைக்கும் கட்டுப்படாத வயிற்றுப்புண் முழுமையாக குணமாகும். (அழகும் ஆரோக்கியமும்) இது குறித்து விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
திராட்சையை, கொடிமுந்திரி என்றும் அழைப்பார்கள். திராட்சை ரசத்தில் இருந்து பல வகையான மருந்துகளும், டானிக்குகளும் தயாரிக்கப்படுகின்றன. இதனால், இதற்கு டானிக் புரூட் என்ற பெயரும் உண்டு. (அழகும் ஆரோக்கியமும்) குடல் புண், கல்லீரல், மண்ணீரல் கோளாறு உள்ளவர்கள், இதன் பழச் சாறை, மூன்று வேளையும், அரை அவுன்ஸ் வீதம் பருகினால், குணம் பெறலாம். அன்றாட வாழ்வில் திராட்சையை சேர்த்துக் கொண்டால், உடலுக்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கும்.
திராட்சையில், கருப்பு திராட்சை, பச்சை திராட்சை, பன்னீர் திராட்சை, காஷ்மீர் திராட்சை, ஆங்கூர் திராட்சை, காபூல் திராட்சை, விதையில்லா திராட்சை என பல வகைகள் உண்டு. (அழகும் ஆரோக்கியமும்) இவை அனைத்திற்கும் நோய்களை குணப்படுத்தும் சக்தி உண்டு. குறிப்பாக, அல்சருக்கு திராட்சை அருமருந்தாகும்.
காலையில், திராட்சை சாறு குடித்து வந்தால், வேறெந்த மருத்துவ சிகிச்சைக்கும் கட்டுப்படாத வயிற்றுப்புண் முழுமையாக குணமாகும். (அழகும் ஆரோக்கியமும்) அதேபோல், தலைச்சுற்றல், மலச்சிக்கல், கை கால் எரிச்சல் உள்ளவர்களும், திராட்சையை பழமாகவோ, சாறாகவோ உட்கொண்டு பயனடையலாம். மலச்சிக்கலை சரி செய்ய, திராட்சை நல்ல மருந்து.
மலச்சிக்கல் உள்ளவர்கள் உலர் திராட்சையை இரவு உறங்கும் முன் ஒரு கைப்பிடி அளவு சாப்பிட்டால், மறுநாள் காலை பலன் தெரியும். (அழகும் ஆரோக்கியமும்) இதே பிரச்சினை குழந்தைகளுக்கு இருந்தால், சிறிதளவு தண்ணீரில், உலர் திராட்சையை இரவில் ஊறப்போட்டு, காலையில் பிசைந்து, அதன் சாறு மட்டும் குடிக்க கொடுத்தால் சரியாகி விடும்.
கர்ப்பிணி பெண்களுக்கு, குமட்டல், வாய்க்கசப்பு இருக்கும் நேரங்களில், திராட்சையை சாப்பிட்டால் பலன் கிடைக்கும். (அழகும் ஆரோக்கியமும்) எடை குறைவாக இருப்பவர்களும், உடம்பில் சூடு அதிகம் உள்ளவர்களும், திராட்சையை சாப்பிடலாம். ரத்த சுத்திகரிப்பில் திராட்சை முக்கிய பங்கு வகிக்கிறது.
திராட்சை பழச்சாறு, சூரிய வெப்பத்திலிருந்து தாக்கக் சூடிய சரும பாதிப்புக்கள் மற்றும் கதிர்களிடமிருந்தும், வெப்பத்தால் வரும் கட்டிகளிலிருந்தும் பாதுகாக்கும் தன்மை கொண்டது. (அழகும் ஆரோக்கியமும்) இது இயற்கையாகவே சருமப் பிரச்சினைகளை வர விடாமல் தடுக்கும் சக்தி கொண்டது. பொதுவாக, வெயில் காலத்தில் தினமும் ஒரு குவளை திராட்சை சாறு அருந்துவது சிறந்தது.
திராட்சை சாற்றை சருமத்தில் தேய்த்து வந்தால், அதில் உள்ள இறந்த திசுக்கள் நீங்கி, சுருக்கங்கள் அற்று இயற்கையாக காணப்படும். (அழகும் ஆரோக்கியமும்) நல்ல ரத்த ஓட்டத்தால், சருமத்தின் பளபளப்பு தன்மையும் அதிகரிக்கிறது. திராட்சை சாறு, சருமத்துக்கான ஈரப்பதத்தை இயற்கையாகவே கொடுக்கிறது.