FTC Forum

Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: MysteRy on June 25, 2025, 08:35:31 AM

Title: வெறும் வயிற்றில் உண்ணக் கூடாத உணவுகள் எவை?
Post by: MysteRy on June 25, 2025, 08:35:31 AM
(https://i.ibb.co/HL1ZKTwC/498710917-1186715576823001-840370263983703098-n.jpg) (https://imgbb.com/)


இன்றைய யுகத்தில் நமது காலை நேரம் அழுத்தங்களின் மத்தியில் கடக்கிறது. ஆண், பெண், குழந்தைகள் என்று எல்லோரும் பணியிடத்திற்கு பள்ளிகளுக்கு விரைந்து கிளம்புவதால் அவர்களின் காலை உணவு பெரும்பாலும் தவிர்க்கப்படுகிறது.
இல்லையென்றால் கைக்கு கிடைத்ததை சாப்பிடும் படியாக இருக்கிறது. இது உடல் நலத்தை வெகுவாக பாதிக்கிறது. காலை உணவு தான் அன்றைய முழு நாளுக்கான ஆற்றலை உருவாக்கும்.
நாம் ஆரோக்கியம் என்று நினைக்கும் சில உணவுகளை காலையில் வெறும் வயிற்றில் உண்ணாமல் தவிர்ப்பது நல்லது. அவற்றுள் என்னதான் ஊட்டச்சத்துகள் அடங்கி இருந்தாலும் காலை உணவாக அத்தகைய உணவுகளை எடுத்து கொள்ளும்போது உடல் உபாதைகள் ஏற்படுவதை தவிர்க்க இயலாது. அந்த உணவுகளின் அட்டவணையை இப்போது காண்போம்.
பெரும்பாலானோர் காலையில் கண் விழிப்பதே காபியில் தான். காலையில் வெறும் வயிற்றில் காபி பருகுவது உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கும்.
வெள்ளரிக்காய் ஒரு ஊட்டச்சத்து மிகுந்த உணவு. நீர் சத்து அதிகம் இருக்கும் ஒரு உணவும் கூட. ஆனால் இதனை வெறும் வயிற்றில் உண்ணுதல் கூடாது. வெறும் வயிற்றில் இதனை உண்பதால் வயிற்று வலி அல்லது நெஞ்செரிச்சல் ஏற்படலாம்.
வாழை பழத்தில் மெக்னீசியம் அதிகம் உள்ளது. வெறும் வயிற்றில் வாழை பழத்தை உட்கொள்வதால் இரத்தத்தில் மெக்னீசியத்தின் அளவு அதிகரிக்க கூடும். இது இதயத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும்.
வெறும் வயிற்றில் இனிப்பு உணவுகளை தவிர்ப்பது நல்லது . இனிப்பு உணவுகளால் உடலில் இன்சுலின் அளவு அதிகரிக்க படுகிறது. இதனால் காலையிலேயே கணையதிற்கு அதிகமான ஆற்றல் தேவைப்படுகிறது. காலை உணவில் இனிப்புகள் இடம்பிடிக்கும் போது நீரிழிவு நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உண்டு.
பெரியவர் முதல் குழந்தைகள் வரை தக்காளியை அனைவரும் சமைக்காமல் அப்படியே சாப்பிட விரும்புவர். ஆனால் வெறும் வயிற்றில் தக்காளியை சாப்பிடுவதால் இரைப்பை புண் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். மேலும் இதில் இருக்கும் டேனிக் அமிலம் அசிடிட்டியை ஏற்படுத்துகிறது.
வெறும் வயிற்றில் சோடா அல்லது மற்ற குளிர் பானங்கள் எடுத்துக் கொள்ளும்போது அவை வயிற்றில் இரத்த ஓட்டத்தை குறைக்கின்றன. மற்றும் சளி சவ்வுகளை சேதப்படுத்துகின்றன. செரிமான நேரத்தை அதிகப்படுத்துகின்றன.
குடலுக்கு நன்மை தரும் லாக்டிக் அமில பாக்டீரியா யோகர்டில் உள்ளது. ஆனால் வெறும் வயிற்றில் ஹைட்ரொக்ளோரிக் அமிலம் அதிகமாக சுரக்கும் நிலையில் இந்த பாக்டீரியாவை அந்த அமிலம் சேதப்படுத்தும்.
காலை உணவாக காரசாரமான உணவுகள் உண்பதால் செரிமானத்திற்கு தொந்தரவுகள் ஏற்படும். இதனால் நெஞ்செரிச்சல் ஏற்படும், . அதனால் காரமான உணவுகளை காலையில் வெறும் வயிற்றில் உண்ணுவது தவிர்க்க படுவது நல்லது.
காலை உணவாக எதை சாப்பிடும் போது நாள் முழுக்க ஆற்றலுடன் மற்றும் ஆரோக்கியத்துடன் இருக்கலாம் என்ற கேள்விக்கு பதில்.. முட்டை, ஓட்ஸ் , பிரவுன் பிரட் , தேன் , பாதாம், அக்ரூட் போன்ற நட்ஸ்கள் சிறப்பான நாளை தொடங்க உதவும் உணவுகளாகும்.
இவற்றை வெறும் வயிற்றில் காலை உணவாக எடுத்துக் கொள்ளும்போது வயிற்றுக்கு எந்த சேதமும் ஏற்படாமல் உணவை செரிமானத்திற்கு தயார் படுத்தும். உடலுக்கு தேவையான ஆற்றல் நாள் முழுதும் கிடைக்கும்.