FTC Forum

தமிழ்ப் பூங்கா => பொதுப்பகுதி => Topic started by: MysteRy on June 24, 2025, 04:30:05 PM

Title: உலகப் புகழ்பெற்ற 32 வயதான கால்பந்து வீரர் ‘சாடியோ மானே’ (Sadio Mané)
Post by: MysteRy on June 24, 2025, 04:30:05 PM
(https://i.imgur.com/wajz44r.jpeg)

செனகல் நாட்டைச் சேர்ந்த -
உலகப் புகழ்பெற்ற 32 வயதான
கால்பந்து வீரர் ‘சாடியோ மானே’
(Sadio Mané)

இவர் இந்திய மதிப்பில் வாரத்திற்கு
14 கோடி ரூபாய்  சம்பாதிப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வளவு சம்பாதித்தும்,
டிஸ்பிளே உடைந்த மொபைலுடனே
பல இடங்களில் காணப்பட்டார்.

ஒரு நேர்காணலில், இதைப் பற்றி அவரிடம் கேட்டபோது,

“நான் அதைச் சரிசெய்வேன்.
டிஸ்பிளே மாற்றி விடுவேன்”

என்றார்... நீங்கள் ஏன் டிஸ்பிளே
மாற்ற வேண்டும்... பல கோடிகள்
சம்பாதிக்கும் நீங்கள் புதிய
மொபைலே வாங்கலாமே”

என்று அவரிடம் கேட்டனர்...

“என்னால்
1000 மொபைல்கள்,
10 ஃபெராரிஸ்,
2 ஜெட் விமானங்கள்,
எண்ணற்ற டயமண்ட் கடிகாரங்கள்...
எல்லாம் வாங்க முடியும்,
ஆனால் இவற்றையெல்லாம்
நான் ஏன் வாங்க வேண்டும்?

“நான் வறுமையைப் பார்த்திருக்கிறேன்... சாப்பாட்டிற்குக் கஷ்டப்பட்டுள்ளேன்... என்னால் படிக்கக்கூட முடியாத அளவுக்கு
வறுமை என்னைச் சூழ்ந்திருந்தது... அணிவதற்குக் காலணிகள் வாங்க முடியாமல் வெறுங்காலுடன் விளையாடியுள்ளேன்... நல்ல
உடைகள் இல்லாமல் இருந்துள்-
-ளேன்... பட்டினி கிடந்துள்ளேன்...

“ஆனால்... இன்று நான் நிறைய
பணத்தைச் சம்பாதிக்கிறேன்;
அதனால்தான் சம்பாதிக்கும்
பணத்தில் மக்கள் படிக்கும்படியாகப் பள்ளிகளை உருவாக்கியுள்ளேன்.

“என் நாட்டில் உள்ள ஏழைக் குழந்தைகளுக்குப் புதிய காலணிகளும், உடைகளும்,
உணவும் கொடுக்கிறேன்.

“வசதியாக - பகட்டாக -
ஆடம்பரமாக - படோடோபமாக
நான் தனித்து வாழ்வதற்குப்
பதிலாக அதை என் மக்களுடன்
பகிர்ந்து கொள்ளவே விரும்புகிறேன்.”

என்றார் அந்த அற்புதமான -
மனிதநேயம் மிக்க மாமனிதர்.