FTC Forum

தமிழ்ப் பூங்கா => பொதுப்பகுதி => Topic started by: MysteRy on June 21, 2025, 04:09:33 PM

Title: பூவரச இலையில் பீப்பி.. சிம்னி விளக்கு.. 80s.. 90s.. வாழ்க்கை ரகசியம்...
Post by: MysteRy on June 21, 2025, 04:09:33 PM
(https://i.imgur.com/lCSPRSj.jpeg)


 80களில், 90களில் பிறந்த குழந்தைகள் மிகவும் அதிர்ஷ்டசாலிகள் தான்... ஏன் தெரியுமா? ஏனென்றால் தொழில்நுட்ப வளர்ச்சியுடன் சேர்ந்து வளர்ந்தவர்கள் இவர்கள்தான்.

அதாவது, அன்றைய வீடியோ கேமில் தொடங்கி இன்றைய பிளே ஸ்டேஷன் வரை அனைத்தையும் முதலில் உபயோகப்படுத்தியது இவர்கள்தான்.

அன்று தங்கள் பெற்றோர்கள் ஒரே ஒரு ரூபாய் கொடுத்தாலே அதை வைத்து பள்ளி காலங்களில் அதிகபட்ச சந்தோஷத்தை வாங்கியவர்களுக்கு அந்த காலம் மறக்க முடியாத சொர்க்கம் என்றால் அது மிகையாகாது.

சுகமான நினைவுகளும், மறக்க முடியாத சில நிகழ்வுகளும் கொண்ட பாக்கியம் பெற்றவர்கள்தான் 90-களில் பிறந்த குழந்தைகள்.

கேட்டில் ஏறி நின்று கொண்டு அதை ஒற்றைக் காலால் திறந்தும், மூடியும் விளையாடிய கடைசி தலைமுறை.

கொய்யா மரத்தில் ஏறி அணில், கிளி கடித்த பழங்களை சாப்பிட்ட கடைசி தலைமுறை.

தமிழ் சினிமா பாடல் வரிகள் சிறு சிறு புத்தகங்களாய் கிடைக்கும். அதை வாங்கி போட்டி போட்டு படித்த சூப்பர் சிங்கர்கள் அல்லவா? நாம்.

பூவரச இலையில் பீப்பி செய்து இசை வாசித்த கடைசி தலைமுறை.

தட்டான், முயல் பிடிக்க காடுகளில் அலைந்த கடைசி தலைமுறை.

ஆசை ஆசையாக கடிதம் எழுதியதும், அதை பல காலம் பாதுகாப்பாகச் சேர்த்து வைத்திருந்ததும் நம் தலைமுறை தான்.

சிம்னி விளக்கு பயன்படுத்திய கடைசி தலைமுறை.

ஊருக்குள் வரும் கரடி, குரங்குகளை பார்த்து முதலில் பயந்தாலும், பிறகு அதனை பின்தொடர்ந்து போக்கு காட்டிய கடைசி தலைமுறை.

வைக்கோல் போர்களில் துள்ளிக்குதித்து பிறகு எரிச்சல் தாங்க முடியாமல் தள்ளாடிய கடைசி தலைமுறை.

இதை படித்தவுடன் உங்களுக்கும் மலரும் நினைவுகள் ஞாபகத்தில் வந்துவிட்டதா?