FTC Forum
தமிழ்ப் பூங்கா => கதைகள் => Topic started by: Anu on April 17, 2012, 02:35:50 PM
-
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fi1025.photobucket.com%2Falbums%2Fy313%2Froserose73%2Fhomelessness.jpg&hash=1bb6ae5294fb8f89a04d35c5ec086f9b5d76dd42)
நற்பகல் நேரம், மத்தியான வெயில்
கொளுத்திக்கொண்டிருந்தது.
மரத்தடியில் ஒருவன் நன்றாக உறங்கிக்கொண்டிருந்தான்.
அந்த வழியாக வந்த விறகுவெட்டி அவனைப்பார்த்தான்.
“கடுமையான உழைப்பாளியாக இருக்க வேண்டும் உழைத்த களைப்பால்தான் இந்த வெயிலிலும் இப்படிஉறங்குகிறான்.”
என நினைத்துக்கொண்டே சென்றான்.
அடுத்ததாக திருடன் ஒருவன் அந்த வழியாக வந்தான்
“இரவு முழுவதும் கண்விழித்து திருடி இருப்பான் போல தெரிகிறது அதனால்தான் இந்த சுட்டெரிக்கும் வெயிலிலும் அடித்துப்போட்டதுபோல் தூங்குகிறான் “
என நினைத்துக்கொண்டே சென்றான்.
மூன்றாவதாக குடிகாரன் ஒருவன் அந்த வழியாக வந்தான் .
“காலையிலேயே நன்றாக குடித்துவிட்டான் போல இருக்கிறது அதனால்தான் குடிமயக்கத்தில் இப்படி விழுந்து கிடக்கிறான்”
என நினைத்துக்கொண்டே சென்றான்.
சிறிது நேரத்தில் துறவி ஒருவர் வந்தார்.
“இந்த நண்பகலில் இப்படி உறங்கும் இவர் முற்றும் துறந்த ஞானியாகத்தான் இருக்க வேண்டும் வேறுயாரால் இத்தகைய செயலை செய்ய முடியும்”
என அவரை வணங்கிவிட்டு சென்றார்.
கதையின் நீதி:-
நாம் எப்படியோ நம் எண்ணங்களும் அப்படியே .!!!
-
nice anu nanum appadiye...
ithula entha ragamnu than therila......
aana manam oru nilai illathathau azhaga soli iruka anu...........