FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: aasaiajiith on April 17, 2012, 08:27:46 AM

Title: உலக அழுக்கி நீ !
Post by: aasaiajiith on April 17, 2012, 08:27:46 AM
அழுக்கி நீ !
உலக அழுக்கி நீ !

என்னை கவர்ந்த அழுக்கி நீ
அழகழகாய் ஆயிரம் பேர் இருந்தும்
அழகாய் எனை கவர்ந்த
அழுக்கி நீ !
உலக அழுக்கி நீ !
 ...

உலகத்தில் உள்ள ஒட்டு மொத்த
அழுக்கையும் அப்படியே அளவெடுத்து
ஒட்டி வைத்தாலும், கொட்டிவைத்தாலும்   
உன் போல அழகில்லை என் அழுக்கியே !

அழுக்கழுக்காய் தான் உன் ஒரு சில
வெளிப்பாடுகள், இருந்தும் அழகாய்
மிக அழகாய் எனை தாக்கும்  இடர்பாடுகள் .

நாள் ஒன்றிற்கு இரண்டு முறை , கோடை
வந்தால் அதுவே மூன்று முறை - உன்
வீட்டு தண்ணீருக்கு மட்டும்
மோட்சம் தருகிறாய், குளியல் அறையில்

அதனால் தானோ என்னவோ ?
இன்னமும் அழுக்கி நீ ...

நான் இருக்கும் கடுப்பில் இன்னும்
என்னனவோ எடுத்துரைக்க தான் எண்ணம்
இனி ஒரு வார்த்தையும் உரைத்தால்
என்னை தொலைத்து  விடுவாய் என்பது திண்ணம் .
ஆகையால் சபையோர்களின் வேண்டுகோள் வண்ணம்
வர்ணிப்பினை நிச்சயம் தொடர்வேன் பின்னம் (பின்னர்) .
Title: Re: உலக அழுக்கி நீ !
Post by: Anu on April 17, 2012, 12:07:13 PM
Unga azhukiya romba azhaga varnichi irukinga ajith  :)
Title: Re: உலக அழுக்கி நீ !
Post by: supernatural on April 17, 2012, 12:48:56 PM

உன் போல அழகில்லை என் அழுக்கியே !

azukkilum azaga???

அழுக்கழுக்காய் தான் உன் ஒரு சில
வெளிப்பாடுகள், இருந்தும் அழகாய்
மிக அழகாய் எனை தாக்கும்  இடர்பாடுகள் .

azukku azukkana velipaadugal kooda ungalai thaakutha??

நான் இருக்கும் கடுப்பில் இன்னும்
என்னனவோ எடுத்துரைக்க தான் எண்ணம்

unga azukki mela apaddi enna kaduppo...azukka irukiratha??illa azukka azaga irukkiratha??


azukkana azagaium ivalo azagaa varnikka ungalalum...ungal tamilaalum mattumey..saathiyam...
azukkin azagu arumai....ungal tamil endrum inimai...
Title: Re: உலக அழுக்கி நீ !
Post by: suthar on April 17, 2012, 01:50:08 PM
ahagai ipdi kooda varniklaama....
nalla iruku...
Title: Re: உலக அழுக்கி நீ !
Post by: aasaiajiith on April 17, 2012, 08:06:33 PM
azukkilum azaga???
காக்கைக்கும் தன் குஞ்சு
பொன் குஞ்சு என்பதை போல்
அழுக்கானாலும்  என்னவள் எனக்கு
அழகி தான்  , பேரழகி தான்!


azukku azukkana velipaadugal kooda ungalai thaakutha??
அழுக்கும் ஒரு அழகுதான் என
அழுக்காகி பார்த்தால் தெரியும்
முயற்சி பண்ணித்தான் பாருங்களேன்
ஒரு முறை ,ஒரு நாள் .


unga azukki mela apaddi enna kaduppo...azukka irukiratha??illa azukka azaga irukkiratha??
அழுக்காய் இருந்து
 இத்தனை
அழகாய் இருந்து
தன் இனிமையான  நினைவால்
என்னை அழக்கழிப்பதால்
கடுப்பு