FTC Forum

தமிழ்ப் பூங்கா => திரைப்பட பாடல் வரிகள் (தமிழ்) => Topic started by: Jithika on May 31, 2025, 07:15:38 AM

Title: 🌹Velli nilavae…. velli nilavae….🌹
Post by: Jithika on May 31, 2025, 07:15:38 AM
Englishதமிழ்
பாடகி : உமா ரமணன்

பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : வெள்ளி நிலவே
வெள்ளி நிலவே வெள்ளி
நிலவே வெள்ளி நிலவே
வீண் சோகம் ஏனடி மானே
ஏனடி முல்லை மலரே
முல்லை மலரே உன் பாரம்
தீர்ப்பவர் யாரு கூறடி மின்னும்
சிலையே அன்னை போல் வரவா
நானும் சோறூட்ட உண்ணாதிருந்தால்
இங்கே யார் வருவார் உன்னை சீராட்ட

ஆண் : வெள்ளி நிலவே
வெள்ளி நிலவே வீண்
சோகம் ஏனடி மானே
ஏனடி

ஆண் : விண்ணில் ஓடி
தன்னால் வாடும் நிலவே
நாளும் உருகாதே உன்னை
பாடி மண்ணில் கோடி கவிதை
வாழும் மறவாதே நிலா சோறு
நிலா சோறு தரவா நீயும் பசியாற
குயில் பட்டு குயில் பாட்டு தருவோம்
நாங்கள் குஷியாக

ஆண் : வானவில்லும் தானிறங்கி
பாய் போடுமே நீயும் தூங்க ஆடும்
மயில் தோகை எல்லாம் தாலாட்டியே
காற்று வீச தேவ கன்னியே
தேய்வதென்ன நீ தன்னாலே

ஆண் : வெள்ளி நிலவே
வெள்ளி நிலவே வீண்
சோகம் ஏனடி மானே
ஏனடி முல்லை மலரே
முல்லை மலரே உன்
பாரம் தீர்ப்பவர் யாரு
கூறடி

ஆண் : சொந்தம் யாரு பந்தம்
யாரு நிலவே பாரு எனைப் பாரு
நெஞ்சில் பாரம் கண்ணில் ஈரம்
துடைப்பார் யாரு பதில் கூறு
உள்ளம் தோறும் கள்ளம் நூறு
அதை நீ பார்த்து எடை போடு
உன்னை காக்க தொல்லை தீர்க்க
வருவோம் நாங்கள் துணிவோடு

ஆண் : வானத்தோடு கோவம்
கொண்டு நீ போவதேன் பால்
நிலாவே வானம் காக்க நாங்கள்
உண்டு நீ நம்பியே பார் நிலாவே
தேவ கன்னியே தேய்வதென்ன
நீ தன்னாலே

பெண் : வெள்ளி நிலவு வெள்ளி
நிலவு உன்னோடு சேர்ந்திட
தானே பாடுது உள்ளம் திறந்து
உள்ளம் திறந்து தன் சோகம்
தீர்ந்திட தானே தேடுது மின்னும்
நிலவே உன்னாலே வருதே பாடி
சோறூட்ட தள்ளி நடந்தால் வேறாரு
வருவார் என்னை காப்பாற்ற வெள்ளி
நிலவு வெள்ளி நிலவு உன்னோடு
சேர்ந்திட தானே பாடுது

ஆண் : { தன் நன் நானா தன்
நன் நானா தன் நன் நானா
தன் நன் நானா தன் நன்
நானா தன் நன் நானா } (2)